தூதுவளைச் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்…
தூதுவளைச் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்…
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் இந்த தூது வளையும்
ஒன்று. இந்த தூதுவளையை… சிங்கவல்லி, அளர்க்கம் என்றழைப்பதுண்டு. தோட்ட வேலிகளில் வளரும் ஒரு வகை கொடியாகும். சிறுசிறு முட்கள் நிறைந்து காணப்ப டும் இந்த கொடியில் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பண்புகளை கொண்டவையே! இதிலிருந்து ஒன்றினை இங்கு காண்போம்.
ஆஸ்துமாநோய் என்பது மெல்லக்கொல்லும் நோய் என்றுகூட சொல்லலாம். இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்… தினமும் காலையில் வெறும வயிற்றில் தூதுவளைச் சாறு 3 ஸ்பூன் அளவு எடுத்து குடித்து வந்தாலே போதும், இது ஆஸ்துமாவை மட்டுமல்ல அந்த ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை மீட்டுக்கொடுக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக