Pages

சனி, ஜூலை 01, 2017

“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு

தொலைபேசிமூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 
புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நட த்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்றகட்டணமில்லா எண் ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை
பெறலாம்.
இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய 
சேவையை முதல்–அமைச்சர் ஜெய லலிதா தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன்செய்து இலவ ச மருத்துவ ஆலோசனைகளை பெற லாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப் பதாவது:–
பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனை கள், தாய் சேய் நலம் பற்றிய தகவல் கள், ரத்த தானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்ச த்து குறித்த தகவல்கள், முத லமைச்சரின் விரிவுபடுத்தப் பட்ட மரு த்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோச னைகளை இனி இலவசமாக பெறலாம்.
குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ம 
னைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றி ய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை யும் கேட்டு தெளிவு பெற முடியும்.

இதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சே வையினை கொடநாடு முகாமில் முதல்–அமைச்சர் ஜெயல லிதா தொடங்கி வைத்தார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மு க்கியமான திட்டங்க ளை முன்னின்று நிறைவேற்று வதிலும், டாக்டர் முத்து லட்சுமி மகப்பேறு நிதி உத வித் திட்டத்தின் கீழ் பெண் கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் 
குறைத்திடும் வகையிலும், அவர்கள்பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்க ளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங் கப்படும் என்று 2.11.2012 அன்று சட்டமன் றப் பேரவையில் முதல்–அமைச்சர் ஜெய லலிதா அறிவித்து இருந்தார்.

அதன்படி, கிராம சுகாதார செவிலியர்க ளுக்கு 19 கோடியே 17 லட்சம் ரூபாய் மதி ப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணி னிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கி ராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் விஜய பா ஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல த்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக் டர் குழந்தைசாமி, மருத்துவப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை மற் றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: