Pages

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

நானோ தொழில்நுட்பம்


நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும்குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டுஅச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கப்படும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்க மொழியில் நானோ (nano) என்றால் குள்ளமானது என்று பொருள்.
                ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் நூறு கோடியில் (ஒருபில்லியனில்) ஒரு பங்கு. அதாவது ஒரு மில்லி மீட்டர் நீளத்தில் ஒரு நானோ மீட்டர் நீளமுள்ள 10 லட்சம் அணுக்களை வரிசைப்படுத்திவிடலாம்.சாதாரணமாக, மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. நானோ ஆராய்ச்சி வைரஸ்களையும் விட 100 மடங்கு சிறிய நுண்ணிய அணுக்களைப் பற்றியது. இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.
                நானோ தொழில்நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை. மாறாக உயிரியல்வேதியியல்இயற்பியல்,மின்னியல்மருத்துவம்பொறியியல் என்று பல்துறைகளிலும் இதன் தாக்கம்இருந்து வருகிறது. கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாகஅணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும், வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM))போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.
                இந்த தொழில்நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடையதுறைகளை ஒன்று சேர்க்க முடிகின்றது. உதாரணமாக, காந்தவியல்,மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்தியாஉட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் எனக் கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை: