இசையியல் (Musicology) என்பது இசையைப் பற்றி அறிவியல் ஆய்வுமுறையில் கற்கும் துறை ஆகும். பிரெடரிக் கிரைசாண்டர் (Friedrich Chrysander)என்னும் ஜெர்மானிய இசை வல்லுநர், கி.பி. 1863 - இல் இசையியல் என்னும்சொல்லை உருவாக்கினார். அறிவியல் துறைகளைப் பயிலும் முறையில்தொடக்கம், வளர்ச்சி என்ற படிப்படியான நிலைகளில் இசைத்துறையையும்பயின்று, உலகெங்கிலுமுள்ள இசைப் புலவர்களின் படைப்புகளை ஆய்வுசெய்து, விரிவான முறையில் இசையியலை அமைக்க வேண்டும் என்றுகிரைசாண்டர் விரும்பினார். அவர் பாச் (Bach), ஹான்டெல் (Handel) போன்றஇசைப்புலவர்களின் படைப்புகளை முழுமையாக ஆராய்ச்சி செய்ததன் மூலம்அதில் வெற்றியும் பெற்றார். இவரைப் பின்பற்றி பல இசை வல்லுநர்கள்ஆய்வுகளை மேற்கொண்டனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக