Pages

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

கொலோசியம்

பண்டைய ரோமாபுரியில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான கலை அரங்கம் கொலோசியம் (Colosseum) ஆகும். இது கி.பி. 72 - ல் துவங்கி கி.பி. 80 - ல் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 847 - ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வட்ட வடிவம் உடைய கொலோசியத்தின் பாதிப் பகுதி இடிந்து விழுந்தது. தற்போது பாதி அழிந்த நிலையில் வரலாற்றுச் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழ்கிறது.  
      கொலோசியம் அரங்கத்தின் மொத்த உயரம் 159 அடி ஆகும். இது பல நுழைவாயில்களைக் கொண்டது. இந்த அரங்கத்திற்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் 80 நுழைவாயில்கள் உள்ளன. இதில் நான்கு அடுக்குகள் உள்ளன. பூமிக்கு அடியில் பொறியியல் அமைப்புகளும், கொடிய விலங்குகளுக்கான அறைகளும் உள்ளன. விலங்குகள் அரங்கத்தின் மையத்திலிருந்து வெளிவரும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டுள்ளது.  
      இங்கு அடிமைகள், அரசியல் கைதிகள் போன்றோரை கொடிய விலங்குகளுடனும், அவர்களுக்குள்ளாகவும் மோதவிட்டு ரோமானியர் பார்த்து ரசித்தனர். வேதகலாபனை காலங்களில் கிறிஸ்தவர்கள் இங்கு பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
  

கருத்துகள் இல்லை: