Pages

வியாழன், நவம்பர் 08, 2012

வீட்டில் கிடைக்கும் மருத்துவப் பொருட்களின் பயன்கள்


ஞாபக சக்தி பெருக - பப்பாளிப் பழத்தை தினசரி சிறிய அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
உடல் பருக்க - பச்சை நிலக்கடலையும் நூறு கடலையும் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
உடல் பருமன் குறைய - கரட் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வதுடன் இரண்டு கப் மோருடன் இரண்டு கரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து ஒரு வர வாரத்தில் இருந்து உடல் மெலிய ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவரை நிறுத்திவிட வேண்டும்.
முகம் அழகு பெற - துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும்.
வாய் துர்நாற்றம் நீங்க - வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 கப் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
தேள் கடி விஷம் குறைய - தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.
நாவறட்சி நீங்க - நாவறட்சி உள்ளவர்கள் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன் சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.
கம்பளிப் பூச்சி கடி குணமாக - கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.
உதடுகள் சிவப்பாக மாற - புதிதாகச் செடியில் பறித்த கொத்துமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.
முகப்பருவை போக்க - வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.
உள்நாக்கு வளர்ச்சி நிற்க - காரிசலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும். மிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.

கருத்துகள் இல்லை: