நோய்கள் நீங்க கை, கால்கள் மற்றும் உடலில் உள்ள புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் ஒரு சிகிட்சை முறையே அக்குபிரஷர் ஆகும். நம் உடலில் உள்ள இயற்கை தத்துவ அடிப்படையிலான சக்தி ஓட்டத்தை (மெரிடியன்) அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது. இந்த மெரிடியன்கள் ஒவ்வொரு உறுப்பு மற்றும் உள்ளுறுப்புகளை இணைத்து சக்தி ஓட்டத்தைக் கொண்டுள்ளன. நம் கை மற்றும் கால்களில் உள்ள பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய புள்ளியில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட உறுப்பை சென்றடைகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது.
வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும். பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும். வலி அதிகமாக இருந்தால் அந்த உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதற்கு பயப்படத் தேவையில்லை. அந்த உறுப்புகளில் உள்ள பாதிப்புகள் குறைய, குறைய அழுத்தும்போது ஏற்படும் வலியின் அளவும் குறைகிறது.
குடிபழக்கம், புகைப்பிடித்தல், போதைப் பழக்கம், அதிக காமஇச்சை போன்ற மனம் மற்றும் உடல்சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அக்குபிரஷர் புள்ளிகளும் உள்ளன.
அக்குபிரஷருக்கு சுஜோக் தெரபி என்ற பெயரும் உண்டு. அக்குபஞ்சர் மற்றும் ரிப்ளக்ஸாலஜி போன்றவை இதை அடிப்படையாகக் கொண்டு பின்னாளில் தோன்றியவை. அக்குபிரஷர் சீனாவில் தோன்றி ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் இன்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகிட்சையாக விளங்குகிறது. அக்குபிரஷர் சிகிட்சை உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக