Pages

வெள்ளி, அக்டோபர் 04, 2013

குடிநீர் விலைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது


குடிநீர் விலைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.


கிறிஸ்து பிறப்பதற்கு முன் ( கி.மு. ) காலகட்டத்தில் நம் அரசர்கள் மாதம் மும்மாரி பொழிந்ததா ?? என்று மந்திரிகளை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் நம் கிராமங்கள் தன்னிறைவாய் ஆறு, குளம், கிணறு போன்றவைகளை குடிநீருக்காக உபயோகித்து நீர்வளம் மிக்கதாக இருந்தபோது உலகின் ஒரு பகுதியில் குடிநீர் விற்பனையில் இருந்துள்ளது.

இச்செய்தி கிறிஸ்துவ வேதாகமத்தில் (Bible) தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்தை இரு பிரிவுகளாக கிறிஸ்து பிறப்பதிற்கு முன் ( கி.மு. ) எழுதப்பட்டவைகள் "பழைய ஏற்பாடு" என்றும் கிறிஸ்து பிறந்ததிற்கு (கி.பி.) பின் எழுதப்பட்டவைகள் "புதிய ஏற்பாடு" ஏற்படுத்தினர். இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள "புலம்பல் " (The Book of Lamentations ) என்ற ஆகமத்தில் 5 வது அதிகாரத்தில் 4 வது வசனத்தில் "எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது". என்று எழுதப்பட்டுள்ளது.

"புலம்பல் " பழைய ஏற்பாட்டில் இருப்பதால் குடிநீர் விற்பனைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இன்று நமது நிலைமை என்ன ??? ஆறு, குளம், கிணறு போன்ற நீராதாரங்கள் சீர்கெட்டு அருந்த தகுதியற்றதாய் மாறிக்கொண்டிருந்த காலக்கட்டதில் வந்த குடிநீர் விற்பனை இன்று அமோகமாக நடைபெறுகிறது. இரு பருவமழை, இடையே கோடைமழை என இருந்ததை மரங்களை அழித்து மழையை கேள்விக் குறியாக்கியது நாமல்லவா ? பொருளாதார வேகத்தில் மரங்களை அழித்தும், கழிவுகளால் நீராதாரங்களை பாழ்படுத்தியதும் நாமல்லவா ?

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே காவிரியின் குறுக்கே கரிகால சோழன் கல்லணை கட்டி பெரிய நீராதாரத்தை நமக்கு தந்தான். இன்று சுகமாக இருக்கிறோம். நம் வருங்கால சந்ததிகளுக்கு என்ன செய்யபோகிறோம் ??

கருத்துகள் இல்லை: