Pages

புதன், ஜனவரி 23, 2013

வாகனங்களுக்கு எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது நல்லது…


வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான் ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.
பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும்.
பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.
மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.
அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.

கருத்துகள் இல்லை: