Pages

புதன், ஜனவரி 23, 2013

உங்கள் கையெழுத்து கூறும் உங்கள் தலையெழுத்து என்ன?




உங்கள் கையெழுத்து கூறும் உங்கள் தலையெழுத்து என்ன? வாங்க பார்க்கலாம்..!
•பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள் பேரார்வம் மிக்க அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் அதிகாரப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.
•சிறிய எழுத்துக்காரர்கள் எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால் தன்னம்பிக்கையும், துணிவும் இல்லாதவர்கள்.
•எழுத்துகளை வலப்பக்கமாக சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையும் வாழ்வில் இன்பங்களையும் காண்கிறவர்கள்.
•இடப்பக்கம் சாய்த்து எழுதுகிறவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
•சொற்களுக்கு இடையே நிறைய இடம் விட்டு, எழுத்துகளை தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்தே நிற்பார்கள்.
•சங்கிலித் தொடர்போல எழுதுகிறவர்கள் எதிலும் பற்றுடையவர்கள்.
•சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாக சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
•எழுத்துகளை நிறுத்தி நிதானமாக அழகாக எழுதுகிறவர்கள் கடின சித்தமும் கலை உள்ளமும் கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை: