Pages

வியாழன், பிப்ரவரி 05, 2015

எலும்பும் தசையும் குதிங்கால், கால் மூட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு


எலும்பும் தசையும் குதிங்கால், கால் மூட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு

 

மனித உடல் என்பது எலும்பு என்ற கம்பிகளாலும், தசைகள் என்ற சிமெண்ட் கலவைகளாலும் ஆனது. இந்த உடலின் பலமும், தாங்கும் திறனும்  ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது. மனிதன் தன் வாழ்க்கைப் பயணத்தில் பாதியை கடக்கும் போது தசைகளும் தளர்கின்றன. கூடவே எலும்புகளும்  பலமிழக்கின்றன. எலும்புகளின் அடர்த்தி குறைகின்றன. எனவே அவன் பாக்கியுள்ள தன் பயண நாட்களை தளர்வுடனும், சோர்வுடனும், வலியுடனும்  பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். இந்த நிலையை தவிர்க்க சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும்.

தரமான உணவு

நடுத்தர வயது மனிதனுக்கு சுமாராக 1500 மி.கி. சுண்ணாம்புச் சத்து தேவை. இதை சரியாக உள்வாங்கிக் கொள்ள வைட்டமின் டி-யும் தேவை.  ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால் அது எலும்புகளை பலவீனப்படுத்தும். மாவுச்சத்து, கொழுப்பு பொருட்கள் போன்றவை அதிகமானால் உடலில்  கொழுப்பு சத்து அதிகமாகும். உடல் எடை கூடும். தொல்லைகள் தொடரும். எனவே அமிலச்சத்து உள்ள உணவுகளான மாவு, கொழுப்பு, புரதம்  இவைகளை சரியான அளவு மட்டுமே உண்ண வேண்டும். கால்சியம், வைட்டமின்கள் ஈ, மினரல்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள்  அதிகமாக உண்ண வேண்டும்.

குதிங்கால் வலி

உடல் எடையின் பெரும்பகுதி குதிங்காலில் முடியும். அந்த எலும்பு மூலமாக அதற்குக் கீழ் உள்ள தசைப்பகுதியில் தாங்கப்படுகிறது. எந்த  தசைப்பகுதியிலும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தால் அந்த பகுதி புண்ணாகிப்போகும். சிதைந்து போகும்.
வயது கூடும் போது, உடலில் ரத்த ஓட்டங்கள் குறையும் போது இந்த குதிங்கால் செயல்பாடுகளிலும் குழப்பங்கள் வருகின்றன. அந்த குஷன் போன்ற  பகுதி ரத்த ஓட்டம் குறைவதாலும், தொடர்ச்சியான பலமான அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு புண்ணாகிறது.

என்ன செய்யலாம்?

முதலில் அதிக நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும். குஷன் செருப்புகளை (வீட்டிற்குள்ளும் கூட) பயன்படுத்த வேண்டும். சுடுநீரில் பாதக்குளியல்  அவ்வப்போது செய்யலாம். காலை எழுந்த உடன் பாதங்களுக்கு வாம்அப் பயிற்சி கொடுக்க வேண்டும். எழுந்து நின்று கொண்டு இடவலமாக  உள்ளங்காலை புரட்ட வேண்டும். பின் முன்னும் பின்னுமாக காலை புரட்ட வேண்டும். பின்பு நடைப்பயிற்சி, முடிந்தால் குதித்தல், மெது ஓட்டம்சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.

தொடர்ச்சியாக அரைமணி நேரத்திற்கு மேல் நிற்கக்கூடாது. நிற்க, நடக்க, உட்கார என வேலைகள் மாறி மாறி இருப்பது போல் அமைத்துக்கொள்ள  வேண்டும். வலி அதிகமாக இருந்தால், வேறு வழி இல்லையென்றால் வலி உள்ள இடத்தில் ஹைட்ரோ கார்டிசன் என்ற மருந்தை ஊசி மூலம்  செலுத்தலாம். கடைசி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த வலிகள் ஓர் ஆண்டுக்குள் சரியாகி பழைய நிலைக்கு வந்து விடும்.

கருத்துகள் இல்லை: