Pages

செவ்வாய், டிசம்பர் 16, 2014

இமெயிலின் 32-வது ஆண்டு

இமெயிலின் 32-வது ஆண்டு.
------------------------------------------------------------------------------------------------
     32-வது ஆண்டைக் கடந்து செல்லும் இ.மெயிலைக் கண்டுபிடித்தபோது வி.ஏ. சிவாஅய்யாத்துரையின் வயது 14.தான். இன்பாக்ஸ்அவுட்பாக்ஸ்ஃபோல்டர்ஸ்,மெமோஅட்டாச்மெண்ட்முகவரி புக் என்று அனத்து செயல்பாடுகளை எதிரொலிக்கும் மெயில் அமைப்புக்கான கணினி நிரலாக்கத்தை 1978-ஆம் ஆண்டு உருவாக்கினார். இப்போது உள்ள பல இமெயில் அமைப்பிகளில் இது போன்ற அம்சங்கள் அனைவருக்கும் பிரபலமான ஒன்றாகியுள்ளண.
      ஆகஸ்ட் 301982-ஆமாண்டு அமெரிக்க அரசாங்கம் அய்யாத்துரையின் இ.மெயில் கண்டுபிடிப்பை அங்கீகரித்து  விருதுவழங்கி இமெயிலுக்காக முதல் அமெரிக்கப் பதிப்புரிமையை முறைப்படி அறிவித்தது.  அந்தக் காலகட்டத்தில் பதிப்புரிமையினால் மட்டுமே மென்பொருள் கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்க முடிந்தது.
     ஆர்பாநெட்மிட் அல்லது மிலிடரி போன்ற பெரிய நிறுவனங்களைப் போல பெரிய ஆய்வுத்திட்டங்களை வைத்து இமெயில் உருவாக்கப் படவில்லைஇது போன்ற நிறுவனங்கள் எல்லாம் 'முடியாது மிகவும் சிக்கல் ஆனது'  என்று நினைத்ததாக Huffington Post என்ற பத்திரிக்கை கூறியது.
     மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார் அய்யாத்துரைஅவருடைய 7-வது வயதில் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் சென்றார்அவருடைய 14-வது வயதில் நியூயார்க் யூனிவர்ர்ஸிடியில் கணினி நிரலாக்கம் படித்தபோது Courant Institute of Mathematical Sciences என்ற சிறப்பு நிகழ்ச்சியில்   கலந்துகொண்டார்முன்னதாக நியூ ஜெர்ஸியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஆய்வாளராக பணிபுரிந்தார்.
      அய்யாத்துரையின் திறமை,, ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை கண்ட Laboratory Computer Network -இன் இயக்குனர் Dr.Leslie Nicolson  கவனத்தை ஈர்த்ததுஅவர் அய்யாத்துரைக்கு விடுத்த சவால்பழைய முறையான பேப்பர் மூலம் அனுப்பப்படும் தகவல்களை மின்னணு  வழியாக மாற்றி அனுப்பும் முறை.
      50,000 வரிகளுக்கு மேற்பட்ட கணினி நிரலாக்கத்தைக் கொண்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இன்பாக்ஸ்அவுட் பாக்ஸ்ஃபொல்டர்ஸ்மெமோஅட்டாச்மெண்ட்ச்முகவரி புக்பேப்பர்  க்ளிப்ஸ் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் கொண்ட இமெயில் அனுப்பும் ஒரு மின்னணுக் கருவியை உருவாக்கினார்.

கருத்துகள் இல்லை: