Pages

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

வாழைப்பழ தோலின் வியக்க வைக்கும் 8 பயன்கள் !!

வாழைப்பழ தோலின் வியக்க வைக்கும் 8 பயன்கள் !!

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை விரட்டும்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.
பளபளக்கும் பற்களுக்கு
தினமும் வாழைப்பழத் தோலைக் கொண்டு பற்களை ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், மஞ்சள் பற்கள் பளபளக்கும்.
தண்ணீரை சுத்தபடுத்த
குடிநீரை சுத்தம் செய்ய இனி பியூரிபையர் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டியதில்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். ஏனென்றால், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மரு நீங்க
தூங்கும் முன் மரு உள்ள இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் செய்தால் மரு மறைவதோடு, புதிய மருவும் ஏற்படாது.
முக சுருக்கம் நீங்க
வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கிறது. இதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் முக சுருக்கம் நீங்கும்.
புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு
வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.
வலி நிவாரணி
வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு அரை மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால், இன்னும் சிறப்பாக செயல்படும்.
பூச்சிக் கடிகளுக்கு மருந்து
கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.

கருத்துகள் இல்லை: