Pages

வியாழன், செப்டம்பர் 12, 2013

இருதயத்தை பலப்படுத்த ‘தக்காளி மாத்திரை’



இருதயத்தை பலப்படுத்த 'தக்காளி மாத்திரை' 

தக்காளி சாறு உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயன்படுவதாக ஏற்கனவே பல கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல் சுருக்கம், வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது. தற்போது இருதயத்தை பலப்படுத்தும் விதமாக 'தக்காளியினால் ஆன மாத்திரை' ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு 'அடெரோனோன் கேப்சூல்' என்று பெயரிட்டுள்ளார்கள். இது ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து ஓட்டத்தை எளிதாக்கும். இதன் மூலம் இருதய நோயாளிகளுக்கு 50 சதவீதம் நிவாரணம் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல இந்த மாத்திரை மூட்டு வலி, நீரிழிவு மற்றும் புற்றுநோய் தவிர்க்கவும் வரபிரசாதமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். பரிசோதனை கூட ஆய்வில் இருக்கும் இந்த மாத்திரை விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: