Pages

சனி, ஆகஸ்ட் 24, 2013

மேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.



 

இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணினி அதாவது Cloud Computing. கணினியில் உள்ள  ஹார்டிஸ்க் ( Hard Disk)-ல் நம் தகவல்களை  சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல்  போகலாம் இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும் , பதிவேற்றியதை தறவிரக்கவும் 100 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம் இதைப்பற்றித்தான இந்தப்பதிவு.
படம் 1
நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும்  பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : https://www.cx.com
ஆன்லைன் மூலம் இணையதள சேவை கொடுக்கும் நிறுனங்கள் தற்போது Cloud Hosting  என்று சொல்லக்கூடிய மேகக்கணினி முறையில் தங்கள் சேவையை விரிவுபடுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன் ஒன்றைப்பற்றி தெரிந்து  கொள்ளலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும் பரவாயில்லை,விண்டோஸ், மேக்,  அண்ட்ராய்டு, IOS, மற்றும் பிளாக்பெர்ரி போன்ற அனைத்து இணையவசதி உள்ள மொபைல்  மூலமும் நாம் தகவல்களை பாதுகாப்பாக ஆன்லைன் மூலம்  சேமிக்கலாம். ஒவ்வொரு  நாட்டிலும் உள்ளவர்கள் எளிதாக தறவிரக்கலாம் ஒரு நாட்டில் இணையதளப்பிரச்சினை  என்றாலும் அடுத்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாம தெரியும்  இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேகக்கணினி என்ற பெயர் இதற்கு வந்தது என்று. இப்படி சேவை கொடுக்க அதிகமாக கட்டணம் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலையில் ஒரு முன்னனி நிறுவனம் Cloud Storage 10GB சேமிக்க இலவச இடம்  கொடுக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு  நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில்  பாதுகாப்பாக வைக்கலாம். கணினியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணினி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளை பயன்படுத்தலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். 

 

கருத்துகள் இல்லை: