தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி
வாழைப்பழம் சாப்பிடலாம்..!
உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பழங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது. வாழைப்பழம். இந்த வாழைப்பழம் சரிநுட்பமான முழு நிறைவான உணவாகும். புரதத்துடன் மாவுச்சத்து வைட்டமின்கள் தாது உப்புக்கள் முதலியன போதுமான அளவு இப்பழத்தில் உள்ளன. நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள். இன்று விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள்.
புரதம் நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க கால்சியம் இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து இதயம் சீராய்ச் சுருங்கி விரிவடைய மக்னீஷியம் பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம் சோடியம் உப்பு இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம், மூளை வளர்ச்சிக்கும், பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ் என மூன்று வைட்டமின்களும் வாழைப்பழத்தில் உள்ளன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்கு தடையின்றிச் சீராக இருக்கவும் முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்பு குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அறவே குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான் என்கிறார் பிரிட்டிஷ் சத்துணவு நிபுணர் ஜேன்கிரிஃப்பின்.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.
சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம். இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம், அரிய மருந்து இது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக