Pages

புதன், மே 29, 2013

மொபைல் மூலம் பணம் பரிவர்த்தனையின் நன்மைகள்


மொபைல் மூலம் பணம் பரிவர்த்தனையின் நன்மைகள்


--
Imps Transferring Money Through Mobile


பெங்களூர்: பணத்தை பரிமாற்றம் செய்ய அல்லது பில்களைச் செலுத்த தற்போது ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அவற்றில் தற்போது மிக முக்கியமாக இருக்கும் முறை மொபைல் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதாகும். ஆங்கிலத்தில் இது இன்டர்பேங்க் மொபைல் பேமண்ட் சர்வீஸ் (ஐஎம்பிஎஸ்) என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் மிக எளிதாக மொபைல் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். அதுபோல் நமது பில்களையும் கட்ட முடியும்.
இந்த ஐஎம்பிஎஸ் சேவை, வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் தங்களது வங்கி கணக்கை பார்க்கவும், மற்றும் தங்களது கணக்கிலிருந்து வேறொரு கணக்கிற்கு பாதுகாப்பான முறையில் பணபரிமாற்றும் செய்யவும் வழிவகுக்கிறது. அதோடு பணம் பரிமாற்றும் செய்யப்பட்டுவிட்டாதா என்ற உறுதிப்பாட்டையும் உடனடியாகத் தந்துவிடுகிறது.
இந்தியாவில் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் மட்டுமே பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் ஐஎம்பிஎஸ் மூலமாக செய்ய முடியாது. என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.
ஆனால் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) மற்றும் இந்தியன் பேங்கர்ஸ் அசோசியேசன் (ஐபிஎ) ஆகியவை இணைந்து ஏற்படுத்தி இருக்கும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா (என்பிசிஐ)வின் 25வது பிரிவு இந்த ஐஎம்பிஎஸ் சேவையை தற்போது இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது.
ஐஎம்பிஎஸ் சேவையின் நன்மைகள்:
மொபைல் மூலம் பணம் பரிமாற்றும் செய்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன.
1. துரித பண பரிமாற்றும்
2. தனியாக இண்டர்நெட் இணைப்பு தேவையில்லை
3. விடுமுறை நாள்களில்கூட பணத்தை பரிமாற்றும் செய்ய முடியும்
4. வங்கி கணக்கின் விவரத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை
5. கால விரயம் ஆகாது
ஐஎம்பிஎஸ் சேவையின் நோக்கம்:
1. இந்த ஐஎம்பிஎஸ் சேவையின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் தங்களது வங்கி கணக்கை பார்க்கவும், மற்றும் தங்களது கணக்கிலிருந்து வேறொரு கணக்கிற்கு பாதுகாப்பான முறையில் பணபரிமாற்றும் செய்யவும் வழிவகுப்பதாகும்.
2. மொபைல் மூலம் எளிய முறையில் கட்டணங்களைச் செலுத்த வழிவகுப்பது.
3. ஆர்பிஐயின் சிறு கட்டணங்களை எலக்ட்ரானிக் மயமாக்குதல் என்ற திட்டத்திற்கு துணை செய்வது.
4. ஏற்கனவே 2008ல் ஆர்பிஐயினால் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை நடைமுறைப் படுத்துதல்.
5. மொபைல் பேங்கிங் சேவைகளை இந்தியா முழுவதும் உறுதிப்படுத்துதல்.
பணத்தை பரிமாற்றும் செய்பவர் எவ்வாறு ரிஜிஸ்டர் செய்தல்
1. வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையில் பணத்தை பரிமாற்றம் செய்பவர் முதலில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்
2. வங்கியிலிருந்து மொபைல் மணி ஐடண்டிபையர்(எம்எம்ஐடி) மற்றும் எம்பிஐஎன் ஆகியவற்றைப் பெற வேண்டும்.
3. மொபைல் பேங்கிற்கான சாப்ட்வேர் அப்ளிகேசனை மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியுமா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது வங்கி எஸ்எம்எஸ் சேவையை வழங்கினால் மொபைல் மூலம் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணம் பெறுபவரைப் பதிவு செய்தல்
1. பணத்தைப் பெறுபவரும் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியோடு தனது மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். பின் மொபைல் பேங்கிங் சர்வீசில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்
2. வங்கியிலிருந்து மொபைல் மணி ஐடண்டிபையரை (எம்எம்ஐடி) பெற வேண்டும்.
3. லாக் இன் செய்து ஐஎம்பிஎஸ் ஐகனை தேர்வு செய்ய வேண்டும். அல்லது வங்கி எஸ்எம்எஸ் சேவையை வழங்கினால் அதைப் பயன்படுத்தலாம்.
4. பணம் பெறுபவரின் மொபைல் எண் மற்றும் எம்எம்ஐடியைப் பெற வேண்டும்
5. பணம் பெறுபவரின் மொபைல் எண், அவருடயை எம்எம்ஐடி, தொகை மற்றும் நம்முடைய எம்பின் ஆகியவற்றை பதிவு செய்யது சென்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
6. நம்முடைய கணக்கிலிருந்து பெறுபவருடைய கணக்கிற்கு பணம் பரிமாற்றம் ஆகிவிட்டதா என்பதற்கான எஸ்எம்எஸ் வரும் வரை சற்று காத்திருக்க வேண்டும்.
7. இறுதியாக பணம் பரிமாற்ற விவரங்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அது உதவியாக இருக்கும்.
ஐஎம்பிஎஸ் மூலம் எவ்வாறு பணத்தைப் பெறுவது?
1. பணத்தை அனுப்புவருக்கு நமது மைபைல் எண் மற்றும் எம்எம்ஐடியை தெரிவிக்க வேண்டும்.
2. நமது மொபைல் எண் மற்றும் எம்எம்ஐடி மூலம் பணத்தை அனுப்புமாறு அனுப்புவரிடம் கேட்க வேண்டும்.
3. அனுப்பியவரிடமிருந்து நமது வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் ஆகிவிட்டதா என்பதற்கான எஸ்எம்எஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
4. இறுதியாக பண பிரமாறத்திற்கான ரெபரன்ஸ் எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: மொபைல் மணி ஐடண்டிபயர் (எம்எம்ஐடி) என்பது 7 எண்களைக் கொண்டது. இந்த ஐஎம்எம்ஐடியை வங்கி வழங்கும். பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு முன் பணத்தை அனுப்புபவரும் அதனைப் பெறுபவரும் இந்த ஐஎம்எம்ஐடிஐப் பெற்றிருக்க வேண்டும்.
மொபைல் பண பரிமாற்றத்திற்கான அளவு மற்றும் கட்டணம்:
மொபைல் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஒவ்வொரு வங்கியும் நிர்ணயித்திருக்கிறது. அதே வேளையில் நாள் ஒன்றுக்கு ரூ.50,000 வரை ஐஎம்எம்ஐடி மூலம் பணம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று ஆர்பிஐ நிர்ணயித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: