BT Phone Hack ஐ செய்யப் பயன்படுத்தப்படும் அனேகமான Tools ஐ எழுதுவதற்கு Java Programming பயன்படுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் குறித்த Phone Attack செய்யப்பட அது JSR-82 எனப்படும் Java Bluetooth Application Programming Interface (API) கொண்டிருக்கவேண்டும். Hackers இன் Phone JSR-82 வசதியை கொண்டிருக்காவிட்டால் அந்த Phone மூலம் மற்றய Phone Attack செய்யமுடியாது. இது முக்கியமான ஒரு விடயம். ஏனெனில் பெரும்பாலான Cell Phone இல் BT இருக்கின்ற போதிலும் அவற்றில் JAVA வும் JSR-82 வும் இருப்பதில்லை.
Bluetooth Security
BT ஆனது மூன்று வகையான Security Modes ஐ கொண்டுள்ளது.
Mode1: குறித்த Device தன்னை பாதுகாப்பதற்காக எந்த ஒரு Steps ஐயும் எடுப்பதில்லை.
Mode2: இந்த Mode சிறிய அளவு Safe ஆனதாக இருப்பினும் எந்த மேலதிக Device Prtection ஐயும் கொண்டிருக்காது.
Mode3: இந்த Mode ஆனது அதி உயர் Security Level இல் உள்ள ஒன்றாகும். இதன் மூலம் எல்லா Services ஐயும் Application ஐயும் பாதுகாத்துகொள்ளமுடியும்.
Types of Attacks
BT Devices க்கு எதிராக பலவகையான Attacks இருக்கின்ற போதிலும் அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்..
1. Bluebugging
மிகவும் பலம் வாய்ந்த Attack Machanism. இது Attacker ஐ பாதிக்கப்படுபவரின் Phone இன் முழுக் Control ஐயும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றது. இதன் மூலம் Attacker பாதிக்கப்படுபவரின் Phone இல் Calls எடுக்கவோ SMS ஐ வாசிக்கவோ Contact List ஐ எழுதவோ வாசிக்கவோ, Internet ஐ பயன்படுத்தவோ Call Forward செய்யப்படவோ முடியும்.
2. Bluejacking
இதன் மூலம் Unsolisided message அனுப்பப்பட்டு Bluetooth devices ஐ Hack செய்ய முடியும்.
3. Bluesmack
இது ஒரு Buffer overflow attack.
4. Bluesnarf and Bluesnarf++
இந்த attack ஆனது Hackers, Bluetooth Devic இல் உள்ள தகவல்களை களவாட பயன்படுத்தப்படுகிறது.\
5.Helomoto
இது Bluebug ஐ ஒத்த Attack ஆனாலும் சில Trusted Device இன் Poor Implementation ஐ சாதகமாக பயன்படுத்தி Attack செய்கிறது.
Tools for Attack
பலவகையான Options ஐ ஒரு User, Bluetooth Phone ஐ Attack செய்வதற்காக பயன்படுத்த முடியும்.
அவற்றுள் சில
1. E-Stealth
2. Flexipy
Bluetooth Device ஐ Attack செய்ய இவை வியாபார நோக்கத்துடன் சில Products ஐ வெளியிடுகின்றன.
Bluetooth Hack இல் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
பலவகையான பாதுகாப்பு முறைகள், User இன் கவனம் என்பவற்றின் மூலம் இந்த Bluetooth Hacking இன் இருந்து தமது Device ஐ பாதுகாத்துக்கொள்ளலாம்.
ஒரு சிறந்த இலகுவான பாதுகாப்பு முறை Bluetooth ஐ Turn off செய்துவிடுவதாகும். இன்னிலையில் Hackers இனால் Hack செய்யமுடியாது.
சில Device முதலிலேயே Turn on உடன் வருவதால் அவைமட்டில் கவனமாக இருந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு User க்கு BT பயன்படுத்தவேண்டிய தேவை இருப்பின் தேவைப்படும் போது மட்டும் BT ஐ Turn on செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் Users மாதத்திற்கு ஒரு தடவையானது Bluetooth personal Identification Number (PIN) ஐ மாற்றிக்கொள்ளவேண்டும்.
Users அடிக்கடி தமது Bill களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். ஏதாவது தேவையற்ற Calls ற்காக Charge செய்யப்பட்டிருப்பின் அவைதொடர்பில் கவனம் எடுக்கவும். எனவே BT Users எல்லோரும் இந்த BT Device இல் மட்டும் மிகவும் அவதானமாக இருந்து தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி Hacking இருந்து உங்கள் Devices ஐ பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக