Pages

செவ்வாய், ஏப்ரல் 30, 2013

இராவணன் காலத்து சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

undefined
இராவணன் காலத்து. மிகவும் பழைமையான சுரங்கப்பாதை ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்ல வெள்ளவாய வீதியில் 10 ஆம் கட்டை பிரதேசத்தில் சாதின்னாகலகந்த ஊடாக உமா ஓய திட்டத்துக்கான ஆய்வுகள், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இராவணன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இராவணன் ஆற்றின் ஊடாகச் செல்வதாகக் கூறப்படும் மேற்படி சுரங்கப்பாதையை  இராவணன், ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை தோவபன்சலை வரை செல்லப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கல்மலை ஒன்றை வெடி வைத்து அகற்றிய போது, இந்த சுரங்கப் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 11 அடி உயரம் மற்றும் 4 அடி அகலம் கொண்ட இந்தச் சுரங்கப் பாதையில், கீழ் நோக்கிச் செல்லப்படிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இருபக்கச் சுவர்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புராதன இதிகாசங்களின் படி மன்னர் இராவணன், 7 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவுக்குச் சென்று, சீதையைக் கடத்தி வந்து, இராவணன் ஆற்றுக்கு அருகில் மறைத்து வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.

 இதனை உறுதிப்படுத்தும் வகையில், இராவணன் ஆற்றில் உள்ள ஒரு சுவரில் இராவணனின் தோற்றம் கொண்ட உருவம் ஒன்றும் வரையப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சுரங்கப் பாதை அமைந்துள்ள பிரதேசத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: