Pages

வியாழன், ஏப்ரல் 18, 2013

முதன் முறையாக இறகுகளுடன் கூடிய டையனோசர் இனம் கண்டுபிடிப்பு

கனடாவின் வடதுருவத்துக்கு மேற்கு பகுதியிலேயே இதனை விஞ்ஞானிகள் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
இதன் பெயர் ஓர்னிதோமிமிட்ஸ்(Ornithomimids) என்பதாகும். இது 75 மில்லியன் வருடங்களுக்கு பழமையானது எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னரும் பறவை இன டையனோசர்களின் எலும்பு சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இறக்கைகள் மட்டுமல்லாது இறகுடன் கூடிய டையனோசர் இனம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
இதன் இறக்கைகள் பறப்பதற்கு மட்டுமல்லாது அதன் இனப்பெருக்க காலத்தில் முட்டையை அடை காக்கவும், குளிரை தாக்குப் பிடிக்கவும் மட்டுமே உதவியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் இந்த வகை பறவை டையனோசர்களின் எலும்பு மற்றும் சுவடுகள் சீனாவிலும், ஜேர்மனியிலும் பாறைகளுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: