USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட்டா? என கேட்கிறீர்களா?
ஆம்.. பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும். சாதாரண கோப்புகள் என்றால் பரவாயில்லை. முக்கியமான மதிப்புமிக்க கோப்புகளாக இருப்பின் பாதுகாப்பு அவசியம்தானே..?
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.
அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி:
Usb Flash Sequrity
இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
- மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
- அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.
குரல் வழி பாஸ்வேர்ட் அமைக்க
தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் பென்டிரைவைப் பற்றிப் பார்த்துவிடுவோம். அமெரிக்க டாலர்களில் 50$ பெறுமானமுள்ள இந்த பென்டிரைவானது நம்முடைய குரலைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் அமைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பத்தின் அடுத்தபடி ஆகும். கீழ்க்கண்ட வீடியோவில் இந்த பென்டிரைவைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் எப்படி அமைப்பது என தெளிவாக விளக்கியுள்ளனர்.
பிளாப்பி(Floppy) கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb கள். இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவைதான். பயந்துவிடாதீர்கள். இதற்கு கொஞ்சம் நன்றி உணர்வு அதிகம். அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொள்ளும். உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் அற்புதமான ஒரு செயலைச் செய்துவிடும். இவற்றைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.
அந்த வழிமுறைகள் என்னென்ன? பதிவு நீளமாகிவிடும். அதனால் அதை நாளை பார்ப்போமே...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக