இன்று 12.12.12
சென்னை: நாள், மாதம், ஆண்டு என (121212) எல்லாமே '12' ஆக அமைந்திருக்கிறது இன்று. இனி, 2101ம் ஆண்டில்தான் காலண்டரில் இதுபோன்ற அபூர்வ தேதியை (010101) பார்க்க முடியும். இன்றைய தினம் அதிர்ஷ்ட நாள் என்பதால் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஹாங்காங்கிலும் ஆயிரக்கணக்கான ஜோடிகள் இன்று திருமணத்துக்கு நாள் குறித்திருக்கின்றன.
சதுர்த்தசி, அமாவாசை சேர்ந்து வருவது சற்று சுமார் என்று கூறப்பட்டாலும் ஜோதிட ரீதியாக இது நல்ல நாள் என்றும் கூறுகின்றனர். தேதி கூட்டு எண் 3, குருவுக்கு உரியது. தேதி மற்றும் மாதத்தின் கூட்டு எண் 6, சுக்கிரனுக்கு உரியது. வருடத்தின் கூட்டு எண் 5, புதனுக்கு உரியது. 12122012 என அனைத்து எண்களையும் கூட்டினால் வரும் 2, சந்திரனுக்கு உரியது. இந்த நாளில் குழந்தை பிறப்பது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள். நிறைமாத கர்ப்பமாக இருப்பவர்கள் இன்று 12:12 மணிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக சில டாக்டர்கள் கூறினர்.
இதற்கிடையில், 'உலகம் அழியும்' என்ற பீதியும் சேர்ந்து கொண்டுள்ளது. மத்திய அமெரிக்க பகுதியில் கி.மு.2000 முதல் கி.பி.250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இன மக்கள். அவர்கள் தயாரித்த காலண்டர் 5125 ஆண்டு கொண்டதாகும். உலகம் அழிவதை சரியாக கணித்தே காலண்டரை அத்துடன் முடித்திருக்கிறார்கள் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் அந்த தேதி 21122012 என்றும் கூறியிருக்கின்றனர். உலகம் இன்னும் 9 நாட்களில் அழியப்போகிறது என்பதை உறுதியாக நம்பும் கூட்டம் பல நாடுகளில் இருக்கிறது. 'காலண்டர் முடிந்தால் புது காலண்டர் வாங்கி மாட்டுவது போல்தான் மாயன் காலண்டரும். பயப்பட ஒன்றும் இல்லை' என்று விஞ்ஞானிகள் விளக்கம் தந்தாலும், ஒரு கூட்டம் உலகம் அழிவுக்கான கவுன்ட் டவுனை ஸ்டார்ட் பண்ணிவிட்டார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த நான்சி லீடர் என்ற பெண், வேற்றுக்கிரக வாசிகளுடன் தனக்கு தொடர்பு உண்டு என்று கூறி 1995ல் பரபரப்பு ஏற்படுத்தினார். பிளானட் எக்ஸ் அல்லது 'நிபிரு' எனப்படும் கிரகம் பூமி மீதுபயங்கர வேகத்தில் மோதும். இது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி உலகை அழிக்கும். இதுபற்றிய உறுதியான தகவல் தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார். அனேகமாக 2012ல் இந்த கிரகம் பூமி மீது மோதும் என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், '4179 டவுடாடிஸ்' என்று பெயரிடப்பட்ட 3 மைல் அகலமுள்ள பிரமாண்ட விண்கல் ஒன்று இன்று பூமிக்கு மிக அருகில் வந்து, 43 லட்சம் மைல் தொலைவில் கடந்து போவதாக விஞ்ஞானிகள் கூறினர்.
இதற்கிடையில், 'இன்றைய தினம் ஆண்களுக்கு ஆகாது. வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில் வீட்டு வாசலில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அக்கா, தங்கைக்கு ஆரஞ்சு கலரில் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும்' என்று தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு வதந்தி பரவியது. இதையடுத்து, வீட்டு வாசலில் எலுமிச்சை விளக்கு ஏற்றினர்.இதற்கிடையில், ரஜினி பிறந்தநாளும் தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக