Pages

வியாழன், அக்டோபர் 04, 2012

பல கடவுள்கள் ஏன்?

பல கடவுள்கள் ஏன்?

எதைச் சாப்பிட்டால் என்னஅன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறதுஆனால்அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறதுவயிறு நிரம்ப வேண்டும் என்பது சரிஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவாஅது ருசி பார்க்கிறதுஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறதுஅந்த ருசியை அனுசரித்து அவனவன் சாப்பிடுகிறான்அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள்ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறதுஅதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன.
புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம்சுவாபமாக மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள்சில பேரிடத்தில் கெட்ட அம்சம்தான் அதிகமாக இருக்கும்அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லியிருக்கிறார்கள்இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும்அவற்றையெல்லாம் பார்ப்பது இல்லைதத்துவங்களைப் பார்ப்பது இல்லைஅவற்றில் இரண்டுதலைநான்குதலைபசுமாடு பூஜித்தது என்றுவரும்இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்னஎல்லாம் கட்டுக்கதைஎன்று சொல்லிவிடுகிறோம்.
ஒரு கையில் ஒடிந்த தந்தம் என்றால்இன்னொரு கையிலே கொழுக்கட்டை வைத்திருக்கிறார் விநாயகர்அதற்குள் தித்திப்பாக இருக்கிற வஸ்துவுக்குப் பெயர் பூர்ணம்பூர்ணம் என்றால் முழுமைஒரு கையில் இருக்கிற தந்தம் மூளிஇன்னொன்றிலோ முழுமைவாழ்க்கையை முழுமையாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: