
கணனிகளில் காணப்படுகின்ற அநாவசியமான கோப்புக்களின் விளைவாக அதன் செயற்பாடு பாதிக்கப்படுகின்றது.அத்துடன் இவ்வாறான அதிகளவு கோப்புக்கள் நிரம்புவதால் வன்றட்டின் இடவசதியும் குறைவடைய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
எனவே தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணனியின் செயற்பாட்டை அதிகரிப்பதுடன், வன்றட்டின் இடவசதியையும் சிறப்பாக பேணுவதற்கு CCleaner எனும் மென்பொருள் சிறந்ததாக கருதப்படுகின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான CCleaner v3.22 வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பானது விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதுடன், மேலும் பல புதிய கோப்புக்களுக்கு செயற்திறன் வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட சிறிய தவறுகள் நீக்கப்பட்டு சிறந்த பயனர் இடைமுகத்துடன் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக