இந்த உலகில் கோபப்படாமல் இருப்பவர்களைப் பார்க்கவே முடியாது. அனைவருக்குமே கோபம் என்னும் குணம் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால், அவர்களை மனிதர்களாக என்ன மிருகமாகக் கூட நினைக்க முடியாது. ஏன் மிருகத்திற்கு கூட கோபம் அதிகம் இருக்கும். அதற்கு கட்டுப்படுத்த தெரியாது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நமக்கும் அவ்வாறு என்றால், மனிதருக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்? ஆனால் சிலருக்கு கோபம் வந்தால், என்ன செய்வதென்றே தெரியாது. அந்த நேரத்தில் அவர்கள் கட்டுப்பாடின்றி வாய்க்கு வந்தவாறெல்லாம் பேசிவிடுவர். அந்த வார்த்தைகள் அனைத்தும் மிகவும் கடுமையானதாக இருக்கும். பின்னர் என்ன தான் தவறு என்று பின்னர் நினைத்து, மன்னிப்பு கேட்டாலும், அது பயனற்றதாக இருக்கும். மேலும் உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, வராத வியாதிகளைக் கூட வரவழைக்க நேரிடும்.
அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபத்தை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே கோபம் வரும் போது, அவற்றை குறைக்க சில எளிய டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்துக் பார்த்து, அதை நம்பி செய்து வாருங்கள், கோபம் கண்டிப்பாக குறைந்துவிடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உறவுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
கோபம் வந்தால் இவற்றை மனதில் கொள்ளுங்கள்...
* கோபம் வந்துவிட்டால், உடனே பத்து வரை எண்ணிக் கொண்டு வரலாம். அதாவது, கோபம் வரும் போது சற்று அமையாக இருந்து, மூச்சை உள்வாங்கி, பின் மூச்சை வெளிவிடும் போது மெதுவாக மனதிற்குள் 1,2,3 என்று பத்து வரை மெதுவாக சொல்லலாம். இது சிறுபிள்ளைத்தனமாக தெரியலாம். ஆனால் உண்மையில் இவ்வாறு செய்தால், கோபம் குறைந்துவிடும்.
* எப்போது டென்சனாக இருக்கிறீர்களோ, அப்போது யார் பேசினாலும் கோபம் வரும். ஆகவே அந்த நேரத்தில் சற்று தூரம் நடக்கலாம் அல்லது ஓடலாம். இதனால் மூளைச்செல்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி, உள்ளமும் சந்தோஷமாக இருக்கும்.
* கோபம் வரும் நேரம், எப்போதும் உடனடியாக பேச வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அப்போது பேசும் பேச்சுக்கள் மற்றவர்களது மனதை பாதிக்கும். ஆகவே அந்த நேரத்தில் சற்று அமைதியாக இருந்து, யோசித்து, என்ன பேச வேண்டுமோ, அவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து, பிறகு பேசுங்கள்.
* மன்னிப்பு மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். ஒருவர் உங்களுக்கு ஏதேனும் தவறையோ அல்லது தீங்கோ ஏற்படுத்திவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கோபத்திற்கு அனுமதிக் கொடுத்தால், பின்னர் பாசிட்டிவ் ஃபீலிங் அனைத்தும் நெகட்டிவ்வாக மனதிற்குள் தோன்ற ஆரம்பித்துவிடும். ஆனால் அதுவே மன்னித்துவிட்டால், அப்போது நீங்கள் ஒரு பெரிய மனிதர்களாக அனைவருக்கும் தெரிவீர்கள். பின்னர் நீங்களே உங்கள் கோபத்தின் மீதே கோபம் கொண்டு, வெறுத்துவிடுவீர்கள்.
* பதற்றமாக இருக்கும் நேரம் ஏதேனும் நகைச்சுவையைப் பார்க்கலாம். அதிலும் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் காமெடி நடிகர்கள் நடித்த சீன்களை பார்த்தால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆகும். மேலும் டென்சனும் அகலும்.
* எப்போதெல்லாம் டென்சன் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டும். அதாவது மூச்சுப்பயிற்சி, பிடித்தப் பாடல்களைக் கேட்பது, மனதிற்குள் சில வாக்கியங்களான "டேக் இட் ஈஸி", "ஆல் இஸ் வெல்" போன்றவற்றை மனதிற்குள் சொல்லலாம். இவை அனைத்தும் மனதை சற்று தெளிவுறச் செய்யும்.
என்ன நண்பர்களே!!! உங்க கோபத்தை குறைக்க ரெடி ஆகிட்டீங்களா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக