Pages

சனி, ஜனவரி 12, 2013

ஆபத்துகாலத்தில் பெண்களுக்கு உதவும் மென்பொருள்: NIRBHAYA


"நிர்பயா" எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மென்பொருள் மூலம், குறிப்பிட்ட நபர்களுக்கு துரிதச் செய்தியினை, அவசர நிலையில் அனுப்ப முடியும். இந்த மென் பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், ஒருவர் இருக்கும் இடத்தினை குளோபல் பொசிசனிங் ஸிஸ்டம் (GPS) மூலமாக,  குறிப்பிட்ட நபர்களுக்கு அவசரக் குறுஞ்செய்தி அனுப்பலாம்.  இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் என இந்த மென்பொருளைத் தயாரித்துள்ள ஸ்மார்ட் கிளவுட் இன்போடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கஜனான் ஸகாரே தெரிவித்தார். முன் வரையறுக்கப்பட்டுள்ள குறுஞ்செய்திகள் மூலமாக விபத்து, மானபங்கம் போன்ற அவசரமான நிலைகளில் உடனடியாக அனுப்பும் வகையில் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் உள்ள ஹாட்கீ மூலமாக,  இருக்கும் இடத்தினை ஒரு அவசர செய்தியுடன், ஏற்கனவே சேமித்து வைத்துள்ள தொடர்பாளர்களுக்கு உடனடியாக அனுப்ப முடியும்.  தற்போது ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் பயன்படுத்தும் முறையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள "நிர்பயா", விரைவில் ஐபோன் மற்றும் விண்டோஸ் அலைபேசிகளில் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்படும் என ஸகாரே குறிப்பிட்டுள்ளார். இதனைப் பயன்படுத்துபவர்கள், தரவிறக்கம் செய்யும் போது, தங்களது வீட்டு முகவரி மற்றும் அவசரக்காலத் தொடர்பு எண்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: