Pages

புதன், பிப்ரவரி 24, 2016

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை !!!

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை !!!
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...
இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் !!!
உலகம் மிகப்பெரியதுஇதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.
இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான்உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில்
தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம்இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம்உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போதுஅதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும்கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
 மதுரை மீனாட்சியம்மன் கோவில்தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டைஇந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம்,
 கனாடாவின் பெரிய நகரமான டொராண்டோபெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய்உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மேபழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.
இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன்பார்சிலோனாவியட்நாம்கான்சாய்சிட்னிக்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லதமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலை காண :-
It's a big world out there, so we've narrowed it down for you. From the temples of Malta to the crystalline waters of the Yucatán, explore our top destinations to visit this year.

கருத்துகள் இல்லை: