அரை லிட்டர் தண்ணீரின் விலை ரூ.72
பெட்ரோலை விட தண்ணீர் அதிக விலைக்கு விற்கும் காலம் வரப்போகிறது என்று சமூகவியலாளர்கள் அடிக்கடி பயமுறுத்துவார்கள். அந்தக்காலம் ஏற்கனவே வந்துவிட்டது.
ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கும் காசுக்கு இன்று நான் அரைலிட்டர் தண்ணீர் வாங்கினேன்.
ஃபீனிக்ஸ் மாலிற்கு இன்று குழந்தைகளை அழைத்துப் போயிருந்தேன். பொதுவாக மால்களில் பார்க்கிங் கில் தொடங்கி அடிக்கப்படும் கொள்ளைகள் பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். நாம் விரும்பி நம்மை அங்கே ஒப்புக்கொடுக்கிறோம் என்பதால் நான் எழுதுவதில்லை.

பொதுவாக நான் மால்களில் உணவுப் பதார்தங்கள் தவிர்த்து பொருள்கள் எதுவும் வாங்கும் பழக்கம் கொண்டவனல்ல. ஆனால் சக்கர நாற்காலி பயன்படுத்துகிறவர்கள் தடை இல்லாமல் செல்லக் கூடிய இடங்கள் சென்னையில் மால்கள் மட்டுமே. எனக்கு குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல வேறு தேர்வுகள் இல்லை.
அப்பு மாலிலிருந்து கிளம்பும் நேரத்தில் தண்ணீர் தவிக்கிறது என்றான். எனக்கு உடனே கிளம்பவேண்டிய அவசரம். மூன்றாவது தளத்தில் இருக்கும் ஃபுட்கோர்ட்டில் போய் தண்ணீர் வாங்க அவகாசம் இல்லை. நான் இருந்தது தரைத் தளத்தில். அருகில் இருந்த ஒரு ஜீஸ் கடையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொடுத்தேன்.
பில்லுடன் 28 ரூபாய் சில்லரை கொடுத்தார்கள்.
பில்லுடன் 28 ரூபாய் சில்லரை கொடுத்தார்கள்.
அரைலிட்டர் ஹிமாலயன் மினரல் வாட்டர் பாட்டிலின் விலை 72 ரூபாய். ஹிமாலயாவில் போய் சிவபெருமானின் தலையிலிருந்து கிளம்பும் ஊற்றிலிருந்து நேரடியாக பிடித்துக்கொண்டு வந்தால்கூட இந்த விலைக்கு விற்க முடியுமா என்று தெரியவில்லை.
பில்லில் தண்ணீர் பாட்டிலின் விலை 60 ரூபாய், சர்வீஸ் டாக்ஸ் 2.97 காசுகள், வாட் 8.70 காசுகள் மொத்தம் 71.67 காசுகள். ரவுண்டாக 72 ரூபாய் என்று இருந்தது.
பில்லில் தண்ணீர் பாட்டிலின் விலை 60 ரூபாய், சர்வீஸ் டாக்ஸ் 2.97 காசுகள், வாட் 8.70 காசுகள் மொத்தம் 71.67 காசுகள். ரவுண்டாக 72 ரூபாய் என்று இருந்தது.
இதில் சுவாரசியமான இன்னொரு விஷயம் தண்ணீர் பாட்டிலில் குறிக்கபட்டிருந்த அதிக பட்ச சில்லரைவிலை எவ்வளவு தெரியுமா? 25 ரூபாய். அதாவது அதிக பட்ச சில்லரை விலையிலிருந்து 35 ரூபாய் கூடுதலாக அரை லிட்டர் தண்ணீர் விற்கப்படுகிறது. அந்த பாட்டிலை மிஞ்சிப் போனால் 15 ரூபாய்க்கு மேல் அந்தக் கடைக்காரர் கொள்முதல் செய்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 300 சதவிகித கூடுதல் விலை.
நம் நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் விலை நிர்ணயம் தொடர்பான அடிப்படை சட்டங்கள் ஏதும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அவை இதுபோன்ற வழிப்பறிக்கொள்ளைகளை எந்த விதத்திலும் நெருங்காதா என்ன?
எந்த நியாயமும் இல்லாமல்இந்த விலைக்கு பொருள் விற்பதை அனுமதிக்கும் அரசு நான் கள்ள நோட்டு அடிக்க முயற்சித்தால் சும்மா விடுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக