Pages

சனி, அக்டோபர் 25, 2014

விவசாயம் கற்கலாம்

வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , பூ, காய்கறிகளை குழந்தைகளை பறிக்க வைப்பது என்பது நல்லதொரு பழக்கம்
* வேம்பு, கொய்யா, மாதுளம்பழம் போன்ற மரங்களை உங்கள் வீட்டைச் சுற்றிலும் வளர்த்து வந்தால் பிற்காலத்தில் அவற்றால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
* சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் கிடைக்கின்றன.
* நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது
18..மண் தான் பிரதானம் ஏன் ?
வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணைஅள்ளிட்டு வந்து போடக்கூடாது. செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்துதொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு
19.பொன்னாங்கண்ணி கீரை..........
நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பிறகு தளிர் விட்டு வளர்ந்து விடும்.
பொன்னாங்கண்ணி கீரையில் பூச்சி அரிப்பு வந்து இலையில் சின்ன சின்னதாய் ஓட்டை விழும். தண்ணீர் விடும் போது வேகமாக நீரை செடி மீது பீச்சி அடிப்பதன் மூலம் அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.
20.கொத்தமல்லி...........
புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது. கொத்தமல்லி இந்த செடி வைப்பதற்கு, மரப்பெட்டியில் மண்ணை நிரப்பி, 1/4 இன்ச் ஆழத்தில் மல்லி விதையை, சரியான இடைவெளியில் வரிசையாக விதைத்து, தண்ணீர் ஊற்றி, போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
21.வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள் எவை?
அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும்
செம்பருத்தி செடி
தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி சரியானதாக இருக்கும். செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது மிகவும் ஈஸியானது. அனைவருக்கும் செம்பருத்தியில் உள்ள வெரைட்டிகள் தெரியுமோ இல்லையோ, ஆனால் அந்த செம்பருத்தி கண்ணைப் பறிக்கக்கூடிய வகையில் பல்வேறு நிறங்களில் உள்ளது. மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லாமல், சில செம்பருத்தி பூக்கள் வடிவம் மற்றும் அளவுகளில் மாறுபட்டிருக்கும். குறிப்பாக இந்த செம்பருத்தி செடியில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், அந்த பூவானது செடியின் இலைகளை பல்வேறு காலங்களில் ஒரே மாதிரி வைத்திருக்கும்
22.செடி,கொடி,மரம் வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்
1. செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது. 2. தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொடிகளை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும். 3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் எஅலத்திற்கும் மிக நல்லவை
6. தக்காளி, வெண்டை, பசை மிளகாய் போன்ற காய்கறி செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு,மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம் 7. அவரை கொடி பூக்காமல் இருந்தால் இலைகலை இடையிடையே உருவி எடுத்து விட்டால்பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத்தொடங்கும்
. 8. கருவேப்பிலை செடி காய்ந்து விட்டால் அந்த இடத்தை பறித்து விட்டால் உடனே துளி விட்டு படர்ந்து வளரும்
9. எழுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும் காயும் காய்த்து விடும்.
10.வீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா இருந்தால் முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டல் பின்னல் நன்றக காய்க்கும்
23.வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?
''ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்... கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்... என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும்
பயன்படுத்தலாம்.
ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும். பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம். குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும். தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட குழிகளை அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும்.
.
vertical garden ,,,,,,,,,,,,
எல்லாருடைய வீட்டிலும் தோட்டம் பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலருக்கு மிக சிறிய இடமே தோட்டம் வைக்க இருந்தாலோ, பிளாட் வாங்கி, கடன் வாங்கி வீடு கட்டிய பின் அடடா! தோட்டத்திற்கு இடம் விட வில்லை என்று ஏங்குபவர்களுக்கு இது வரபிரசாதம். இருக்கும் சிறிய இடத்தில் செடிகள், கொடிகள் போன்றவற்றை நேராக நிமிர்த்தி வளர்த்தால் ஒரு சதுர அடி கூட வீணாகாமல் ஆக்கலாம். அவரை எனும் வகை குத்து செடிகளாக வளரும் அவரை விட அதிக காய்களை தரும். இதே போலதான் நெடுக வளரும் வெள்ளரியும். தக்காளி போன்ற செடிகள் பலவீனமாக இருப்பதால் அவைகளுக்கு கொடிகளை தாங்கும் தடுப்பு கொண்டு அணைப்பு தர வேண்டும். இந்த அணைப்பு செடிகளை ஈர மண் மற்றும் அதிலுள்ள பூச்சிகளில் இருந்தும் காக்கும். இது மட்டுமில்லாது காய் காய்க்கும் போது பறிப்பதற்கும், பூச்சிகளை குருவிகள் உண்பதற்கும் இத்தகைய தடுக்குகள் பயன்படுகின்றது. இவ்வாறாக தடுப்பு போன்ற அமைப்பினை நமது செடிகளின் தேவைக்கேற்றவாறு சுருளாகவோ, சின்ன குச்சிகலாகவோ, நீண்ட கயிறு கொண்டோ (தக்காளி போன்றவற்றிற்கு) தட்டி போன்றோ அமைத்து மண்ணிலிருந்து மேலே படர,வளர வைக்க முடியும். வெள்ளரி மற்றும் பட்டாணி செடியில் தோன்றும் சுருள்கள் பக்கத்தில் எது கிடைத்தாலும் சுருண்டு பற்றி கொள்ளும். உபயோகித்து செய்யும் தட்டிகள் கம்புடன் கட்டி அமைக்கும் போது சிறப்பானதாக இருக்கும். கொடிகள் அதனை தாங்கும் தட்டியில் சுற்றி சுற்றி படர்வதால் மேல் நோக்கியே வளருகின்றது. அனால் அவரை, பசலை, பீன்ஸ் போன்ற கொடிகள் சில சமயத்துக்கு பின் மேலே செல்லாமல் மேலிருந்து கீழாக தங்களையே சுற்றி கொள்ள ஆரம்பிக்கும். இந்த வகை கொடிகள் படுக்கையான தடுக்குகளை விட செங்குத்தாக, நேரான தட்டிகளிலேயே நன்றாக வளருகின்றன. தக்காளி செடியின் தன்மையானது அதற்கு ஆதரவு கிடைக்குமிடத்தில் அப்படியே சாய்ந்துவிடும். அதனால் அவற்றிற்கு தடுப்பு கயிற்றை கட்டும் போது நன்றாக இழுத்து கட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை: