Pages

புதன், நவம்பர் 06, 2013

தமிழர் வழிபாட்டு முறை


தமிழனின் வழிபாட்டு முறை

நமது வழிபாட்டு முறையை இருவகைகளாக கூறலாம்.

இயற்கை வழிபாடு
நடுக்கல் வழிபாடு

இயற்கை வழிபாடு
ஒவ்வொரு நிலத்திற்கும் அந்த அந்த மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் செழிக்க உதவிய இயற்கைக்கு  நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வழிபாடு அமைந்துள்ளது.

முல்லை நில கடவுள்- மாயோன்- கால்நடைகளை பாதுகாக்க 
குறிஞ்சி நில கடவுள்- சேயோன்- வேட்டையாட மற்றும் திணைகளை காக்க 
மறுத்த நில கடவுள்- வேந்தன்- வேளாண் தொழில் உதவ
நெய்தல் நில கடவுள்- வருணன்- கடல் சார்ந்த தொழில் காக்க
பாலை நில கடவுள்- கொற்றவை-போர் புரிய, களவாட, வீரம் சார்ந்த

இயற்கை அவர்களுக்கு கொடையாக கிடைத்தவற்றை தம் நிலத்திற்குரிய தெய்வங்களுக்கு கணிக்கையாக்கினர். இங்கு குறிப்பிடும் கடவுள்களின் ஆயுதங்கள் அந்தந்த நிலத்தின் தொழிலில் பயன்படுத்தும் பொருள்களே. இது உருவ வழிபாடு பெறாத நிலை கொண்ட வழிபாடு

நடுக்கல் வழிபாடு
போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, குலம் காத்து நின்ற தலைவனுக்கு, தலைவிக்கு  இறப்பின் பின்பு நினைவாக நன்றி செலுத்தும் வழிபாட்டு முறை.

தொல்காப்பியத்தில் நடுகல் குறித்தும் நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.


திருக்குறளில்

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்"

என போரில் இறந்த பகைவர் கல்லாகி நின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தன்னுடன் போரில் இறந்த அல்லது தன் உயிரைக் காக்க இறந்த குதிரை, நாய், யானை, கோழி போன்ற விலங்குகளுக்கு நடுகல் பல இடங்களில் எழுப்பட்டுள்ளதை நன்றி உணர்வின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு கிராமங்களில் சங்கிலி கருப்பு,முனி,பெரியசாமி,பெரியண்ணன்,சுடலைமாடன்,கருப்பசாமி வேடியப்பன், மொசவேடியப்பன், நெண்டி வேடியப்பன், சாணாரப்பன், கருப்புராயன்,அய்யனார், மதுரைவீரன், சங்கிலிக் கருப்பன், பாவாடைராயன் போன்ற ஊர் காவல் தெய்வங்களும் நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையவை ஆகும்.

பெண் காவல் தெய்வங்கள் மற்றும் கற்பு ஒழுக்கம் காத்தவர்களுக்கும் நடுக்கல் எடுத்தனர் கன்னிகாதேவி , இரேணுகா தேவி, வஞ்சியம்மன், இசக்கி அம்மன் போன்ற பல பெண் தெய்வங்கள் உள்ளனர்.

இன்னும் ஏனைய ஊர்களில் பெண் தெய்வ வழிபாடு உள்ளது. மழை வேண்டி, பஞ்சம் போக்க வேண்டி என தங்கள் ஊரில் உள்ள ஏழ்மையை போக்க

நமது வழிபாடு எல்லாம் ஒன்று இயற்கைக்கு நன்றி அல்லது சான்றோர்க்கு நன்றி என்று நன்றி செலுத்தும் விதமாகவே உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

கருத்துகள் இல்லை: