Pages

வெள்ளி, நவம்பர் 22, 2013

இல்லறம் இனிக்க வேண்டுமா?





--

.









பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு இருக்கிறோம் என்பது சாதாரண விஷயம். அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் போதோ, நம்மீதான கரிசனை குறையும் போதோ, நமது மனது சலனப்பட்டதில்லை,குறை தேடியதுமில்லை, அதையும் மீறி.... 
நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை…. இது யதார்த்தம்.. ஆனால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட இந்த கணவன் மனைவி உறவை இப்படி யோசிக்கிறார்களா என்றால்… இல்லவே இல்லை… 
நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த இந்த உறவுக்குத்தான் எத்தனை வலிமை பாருங்கள்….அன்பை நாடி ஆருதலை நாடி நாம் அவர்களிடத்தில் சரணடைந்த பின்…எங்களது எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் தலை தூக்கிவிடுகிறதென்று பார்த்தீர்களா…. 
ஆனாலும் பாருங்கள் இந்த உறவை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவெல்லாம் போராடவேணடியிருக்கிறது….இதை யாராலும் மறுக்க முடியாது… அந்தப் போராட்டமும் அலாதியான சுகத்தைத்தான் தருகிறது…
நமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வளர்த்துவிடுகிறது. இல்லறம் இனிக்க கணவரின் குணம் அறிந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் இருந்து கணவர் சோர்வுடன் வரும் போது அன்று நடந்த பிரச்சனைகளை பற்றி சொல்லி அவரை கோபப்படுத்தாதீர்கள். 
கணவர் கோபப்படும் போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். விட்டு கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை. குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பெண்கள் அமைதியாகவும் சூழ்நிலையை புரிந்து கொண்டும் நடந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: