Pages

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அதிசயம்

அதிசய கடல் பறவை கடல் பறவை என்று அழைக்கப்படும் ஒருவகை பறவை அல்ப்ட்ராஸ். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் முட்டையிடுகிறது. இந்த முட்டையை அதிகபட்சமாக 70 நாட்கள் வரை அடைகாக்கிறது. அதிக நாட்கள் அடைகாக்கும் பறவைகளில் இதுவும் ஒன்றாகும். இதுபோன்று மொத்தம் 13 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் நீண்ட இறக்கை கொண்டது அல்ப்ட்ராஸ். இது வானில் மிக நீண்ட நேரம், கழுகு போல் காற்றில் இறக்கையை அசைக்காமலேயே மிதந்து கொண்டிருக்கும்.


மிகப் பெரிய துளை! மத்திய அமெரிக்காவில் இருக்கும் பெலீஸ் தீவில், உலகின் மிகப் பெரிய துளை உருவான பகுதி உள்ளது. இதற்கு பெயர் 'கிரேட் ப்ளூ ஹோல்'. இந்த துளை 70 கிலோமீட்டர் பரப்பளவிலும், 124 கிலோமீட்டர் ஆழத்திலும் உள்ளது. கடல் சீற்றம் ஏற்படும் போது பூமியில் துளை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே இங்கிருந்த குகைகள் இப்போது மிகப் பெரிய துளையாக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ அமைப்பால் உலகின் சிறந்த பாரம்பரிய இடமாக இது தேர்வாகியுள்ளது. ...

உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் ஆடுகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது பூனைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவில் மின்னெ சோபாவில் உள்ள மயோ கிளினிக் மருத்துவக் கல்லுõரி விஞ்ஞானிகள் இச்சாதனை படைத்துள்ளனர். இந்த பூனைகளின் பச்சை நிறம், ஒளிரும் ஜெல்லி மீன்களில் இருந்து எடுத்து செலுத்தப்பட்ட மரபணுவாகும். இதுதான் பூனைகளின் உடலில் பச்சை நிறத்திலான புரோட்டீனை உருவாக்கி ஒளிர செய்கின்றன. இந்த பூனைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து எடுத்து செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு 'டிரிம்ஷிப்' என்று பெயர். இவை விலங்குகளை தாக்கும் 'எப்.ஐ.வி.' எனப்படும் வைரஸ் தொற்றுநோயில் இருந்து இவற்றை பாதுகாக்கும். குளோனிங் முறையில் 3 பூனைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு டிஜிகேட்1, டிஜிகேட்2, டிஜி கேட் 3 என பெயரிடப்பட்டுள்ளன. அவை பச்சை நிறத்தில் உள்ளன

உலகின் உயரமான கட்டடம் 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 828 மீட்டர் உயரம் கொண்ட 'பேர்ஜ் கலிபா' என்ற கட்டடமே மற்ற கட்டடங்களுக்கு போட்டியாக இருந்தது. ஆனால், இப்போது சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் 1,050 மீட்டர் உயரமான இந்த 'அசர்பைஜான்' உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெயரைத் தட்டிச் செல்ல உள்ளது. இந்தக் கட்டடத்தை நிர்மானிப்பதற்கு 2 ஆயிரம் ஹெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 189 மாடிகளை கொண்ட இக்கட்டடத்தை வரும் 2022ம் ஆண்டில் கட்டிமுடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்

கருத்துகள் இல்லை: