Pages

புதன், ஆகஸ்ட் 07, 2013

பிள்ளையார் சுழி வந்த வரலாறு


பிள்ளையார் சுழி வந்த வரலாறு

எழுத்தாணி, சுவடிகள் பயன்படுதிய காலகட்டத்தில் ஓலையின் ஈரத்தன்மை மற்றும் அதன் திடம் ஆகியவற்றை  உறுதி செய்யும் பொருட்டு, ஓலையை பயன்படுத்தும்  பொழுது கிழிசல் விழாமல் இருக்க சுழியம் இட்டு பின்பு கொடு போல் இழுத்து பார்த்தனர்.

அது " உ " வடிவம்  பெற்று காணப்படும்.

அதுவே பின்னாளில் நமது மத வாதிகள் பிள்ளையார் சுழி ஆக்கிவிட்டனர்.

பிள்ளையார் : கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிள்ளையார் வழிபாடு தமிழ் நாட்டுக்குள் பல்லவ மன்னன்னான நரசிம்ம பல்லவன் சாளுக்கியர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்று வந்த பொழுது  அவனது படை தளபதியாக விளங்கிய பரஞ்சோதி வாதாபியில் இருந்து கணபதியை
செங்காட்டான் குடி என்ற ஊரில் கொண்டு வந்து வைத்து கணபதி வழிபாட்டிற்கு பிள்ளயார் சுழி
போட்டார் என்பதே தமிழக வரலாறு பற்றிய குறிப்புகளில் பதிவாகி உள்ளது. கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பிள்ளையார் பற்றிய சான்றுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களிலும் ,பதிவுகளிலும்,ஆராய்சிகளிலும் காணப்படவில்லை.

மேலும் பிள்ளையார் நமது இந்திய நாட்டில் மட்டும் அல்ல, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், பர்மா, திபெத் போன்ற  பல வெளிநாடுகளில் ஆகுழ்(அதிர்ஷ்டம்) மற்றும் ராசி பொருளாக கருதுகின்றனர்.

http://www.itb.ac.id/ இந்த இந்தோனேசியா பல்கலை கழகம் பிள்ளையாரை தனது பலகலை கழக சின்னமாக வைத்துள்ளது. மேலும்  இந்தோனேசியா பணத்தாள்களிலும் பிள்ளையார் உள்ளார்.

கருத்துகள் இல்லை: