http://naturalfoodworld.wordpress.com/
-
மேற்கண்ட விடயமாக இயற்கை உணவு உலகம் உடனடியாக தனது ஆதங்கக் குரலை புதிய தலை முறை தொலைக் காட்சியில் பதிவு செய்தது.அதன் விவரத்தையும் அதற்கு புதிய தலை முறை தொலைக் காட்சி அளித்துள்ள பதிலையும் கீழே தந்துள்ளேன். இந்த பதிவு சம்பந்தமாக நம் வாசகர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யலாம்.
புதியதலைமுறை நிர்வாகத்தினருக்கு வணக்கம் ,
காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்து குடிநீராக்கும் மிஷின் பற்றி விரிவாக கூறி இருந்தது. இது விஷயமாக இயற்கைக்கு மாற்றமாக ஏற்படும் சில பாதகங்களை,
சில அடிப்படையான விசயங்களுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
1. காற்றிலுள்ள ஈரப்பதத்தினால் தான் தாவரங்களும் மரங்களும் தண்ணீர் இல்லாமல் கூட பல
நாட்கள் உயிர் வாழ்கிறது. இப்படி நாம் காற்றிலுள்ள ஈரப்பத்தை எடுப்பது இயற்கைக்கும்
மரங்களுக்கும் செய்யும் துரோகம் அல்லவா ? மரம் செடிகொடிகளே இல்லாவிட்டால் மனிதனின்
நிலை என்ன ?
2. வெயில் காலத்தில் கூட காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினால் தான் நம் உடல் கருவாடு
ஆகாமலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் இருக்கிறது. இப்படி காற்றிலுள்ள
ஈரப்பதத்தை ஊறிஞ்சுவதால் என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை.
3. கருவேல மரம் என்ற ஒரு மரம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக ஊறிஞ்சுவதால்
வெளிநாடுகளில் இம்மரத்தை முழுமையாக தடை செய்தே விட்டனர். இப்போது நமக்குத்தெரியும்
காற்றிலுள்ள ஈரப்பத்தின் முக்கியத்துவம்.
4. அத்துடன் ஈரப்பதத்தை தண்ணீராக்கி கொடுக்கும் மிஷின் பற்றி கூறியவர் பல பெரிய
நிறுவனங்கள் அதிகமான லிட்டர் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றனர் ஆதலால் நாங்கள் பல
மிஷின்களை ஒன்றினைத்து அவர்கள் தேவைக்கான தண்ணீர் கொடுக்க இருக்கிறோம் என்ற
கூறினார். நகரத்தில் இது பொன்ற மிஷின்கள் வந்தால் கண்டிப்பாக நகரம் பாலைவனம் ஆகிவிடும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
5. ஒருவர் தும்மல் செய்யும் போது 40 ஆயிரம் நுன்னிய நச்சுக்கிருமிகள் வெளிவருவதாக
சொல்கின்றனர். இந்த நச்சுக்கிருமிகள் காற்றில் இருப்பதால் , அந்த காற்றில் இருந்து தண்ணீர்
எடுப்பதால் நேரடியாக நச்சுக்கிருமிகளை நம் உடலில் செல்லும் வாய்ப்பும் ஏற்படும் அல்லவா ?
கிருமிகளைச்சுத்தப்படுத்தி கொடுப்பதாக இருந்தாலும் நுன்கிருமிகளை எந்த அளவிற்கு கொல்லும்
என்பதை ஆய்வுக்குட்படுத்தித்தான் பார்க்க வேண்டும்.
6. அரசாங்கமும் உங்களைப்போன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட மீடியாக்களும் இதனால்
மக்களுக்கு ஏற்படும் பாதகங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் நம்
நோக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளை வெளியிடும் போதும் இன்னும் கவனமாக செயல்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.
இதற்கு புதிய தலைமுறை தொலைக் காட்சி அளித்துள்ள பதில் இதோ:
உங்கள் கருத்துக்கு நன்றி.. இனி வரும் நாட்களில் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கிறோம்.
தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக