Pages

சனி, ஜூன் 01, 2013

கொத்தமல்லயின் மகத்துவம்

இலை,விதை இரண்டும் மருத்துவ குணம் நிறைந்தவை.தினந்தோறும் கொத்தமல்லித்தழையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் இரத்தம் சுத்தமடையும்,இரத்தக்குழாய்களில் படிந்துள்ள நச்சுக்கழிவுகள் காணாமல் போகும்.முக்கியமாக மதுவுக்கு அடிமையானவர்கள் மதுவின் மோகத்திலிருந்து விடுபடுவர். மேலும் தலைசுற்றல், நெஞ்செரிச்சல்,சுவையின்மை,பசியின்மை,உடல்களைப்பு நீங்கிடும்,ஆழ்ந்த தூக்கம் வரும்,மன அமைதி கிடைக்கும்,எப்போதும் ஒரு வித பதற்ற நிலை,அச்சவுணர்வுடன் இருப்பவர்கள் தெளிவு பெறுவார்கள். சிறுநீரை பெருக்கும்,வாய்வு கோளாறுகளை நீக்கும். 

கொத்தமல்லி விதையுடன் சீரகம், அதிமதுரம், கிராம்பு, சதகுப்பை, லவங்கம், கருஞ்சீரகம் பனங்கற்கண்டு ஆகியவற்றை கலந்து பொடி செய்து காலை,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர காய்ச்சல்,ஜன்னி, மார்பு வலி, வாந்தி,தொடர் விக்கல்,வாழ்குழறல்,வலிப்பு ஆகியவை பறந்து போகும். உடல்வலி, களைப்பு ஆகியவை பறந்து போய் நல்ல உறக்கம் வரும்,மனதிற்கு தெளிவு கிடைக்கும். கொத்தமல்லியை தினந்தோறும் கணிசமான அளவு எடுத்துக்கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறும்,பார்வைத்திறன் கூடும்,தலை வலி, தலை பாரம் ஆகியன தீரும். 

கருத்துகள் இல்லை: