1812 இல் வெளிவந்த மாசத் தினச் சரிதை தமிழில், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் இதழ் ஆகக் கருதப்படுகிறது. இது ஒரு கிறித்தவத் தமிழ் இதழ் ஆகும். இதன் பிரதிகள் எவையும் தற்போது கிடைக்கவில்லை.
தமிழ் நாட்டில் 1830 வரையில் தமிழில் தனி இதழ்கள் தொடங்கப் பெறவில்லை எனத்தெரிகிறது. இத்துறையிலும் முதல் முயற்சியாக மேற்கொண்டவர்கள் பாதிரிமார்களே ஆவர். தமிழ் நாட்டில் தரங்கம்பாடியில் முதல் அச்சகம் தோன்றியதாக தெரிகிறது. கிருத்துவ மதம் பரப்பவும் , பிரச்சாரம் செய்யவும் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்து முதன் முதலில் அச்சு வடிவில் தமிழை அச்சேற்றியவர்கள் ஜெர்மனியர்கள்.
[தமிழ் அச்சேறியது; அகராதி கண்டது; உரை நடை வளர்ந்தது; தமிழ் எழுத்து சீர்திருத்தம் பெற்றது; இதழ்கள் தோன்றின; கட்டுரைகள் பெருகின. அறிவியல் தமிழ்உருவாகியது. இன்னும் எத்தனையோ அருமை பெருமைகளை நம் அன்னைத்தமிழ் பெற்றது பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியரின் தமிழ்ப்பணி தொடங்கிவிட்டது.சிகன் பால்கு என்பவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1709 ல் தரங்கம்பாடிவந்தார். அச்சுப்பொறி கொணர்ந்து, முதலில் அச்சிட்ட தமிழ்ப்புத்தகம் வெளியிட்டவர் இவரே. தமிழ் இலத்தின் ஒப்பிலக்கணமும் தமிழ் இலத்தின் அகராதியும் இவர் இயற்றியுள்ளார்.தரங்கம்பாடியில் ஓர் அச்சு கூடத்தையும், அச்சடிக்கும் காகிதங்களைத் தயாரிக்கும் காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் பெரும் பொருட்செலவில் நிறுவினார் ]
சென்னையிலிருந்த கிருத்துவ சமயப் பிரச்சாரக் கழகம் ( Religious Tract Society)1831 -ல் செய்தி இதழ் ஒன்றினை முழுவதும் தமிழில் தொடங்கியது. அடுத்து 1835-ல்மெட்ராஸ் கிரானிக்கிள் [Madras Chronicle ] என்ற பெயரில் தமிழிலும் , தெலுங்கிலும் இதழ் வெளி வந்தாகத தெரிகிறது. இதுதான் தமிழில் முதலில் வந்த செய்தி இதழ் என மார்க்ரெட் பார்ன்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். ஆ னால், 1833 -லேயே ' விருத்தாந்தி 'என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கிலும் செய்தி இதழ் வெளி வந்ததாக ஜே.லாங் என்பவர் கூறியுள்ளார். இதற்கு கிழக்கிந்திய கம்பெனி அரசினர் தரவு இருந்தும் 1838 -க்கு பிறகு மறைந்து விட்டது. அடுத்து வந்த தமிழ் இதழ்களில் முக்கியமானது ' ராஜவர்த்தி போதினி 'ஆகும். இது 1855-ல் தொடங்கி மாதம் மும்முறை வெளிவந்தது. அதில் ஆ ங்கில இதழ்களில் வெளியான செய்திகளின் மொழி பெயர்ப்பும் இ டம் பெற்றன. அதே ஆண்டில் 'தினவர்த்தமானி' என்னும் இன்னொரு தமிழ் வார இதழை பி. பெர்கிவல் ( Rev. P. Percival ) என்பார் நிறுவி, மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்று விளங்கியதாக தெரிகிறது.1857 -ல் முதலாவது சிப்பாய் கலகம் ஏற்படுவதற்கு முன்பு தமிழில் தோன்றிய செய்தி இதழ்கள் மிகச்சிலவே. அவற்றில் ஒன்றிரண்டு 1860 ,1870 வரை நீடித்து வந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக