Pages

வியாழன், மே 09, 2013

சுமைகளை இறக்கி வையுங்கள்



சுமைகளை இறக்கி வையுங்கள்..பல அற்புத சுகம் உண்டு உலகில்

ஒரு மனோதத்துவ ஆசிரியர் கையில் ஒரு டம்பளரில் தண்ணிர் வைத்து,,மாணவர்களை பார்த்து கேட்டார்..

இது அதிக எடையுடன் கூடியதா?
இல்ல சார்.
இதை தூக்கினால் கை வலிக்குமா?
இல்ல சார்.
நான் இப்படியே இதை ஒரு மணி நேரம் வைத்தால்..
எடையினால் வலிக்காது..ஆனால் கை வலிக்கும்..தசை இறுகுவதால் வலிக்கும்.
அப்ப என்ன செய்யலாம்
டம்பளரை கீழே வைத்தால் வலிக்காது...ஹ
இதை நான் ஒரு நாள் முழுதும் பிடித்திருந்தால்...
மிகவும் கடினம்..
டம்பளர் எடை கூடுமா?
இல்ல சார்...
இப்ப்ரச்னைக்கு தீர்வு?
அதை கிழே வைத்து விடுங்கள்..

ஆசிரியர் சொன்னார்..மாணவர்களே,, அந்த டம்பளரின் எடை போலத்தான் நம் ப்ரஸ்னைகளும்..எந்த ப்ரஸ்னையும் நாம் அதிக நேரம் சுமக்கக்கூடாது..அதை சும்ப்பதால் அது நம்மை சூழ்நிலை கைதி ஆக்கி விடும்..அதை அப்பப்ப இறக்கி வைத்து விட வேண்டும்..இன்றைய ப்ரஸ்னைகளை இரவே இறக்கி விட்டு, நாளைய ப்ரஸ்னைக்கு தயாராக வேண்டும்.

ஒரு மிக அழகான உவமை இது..நம் மனதில் நாம் ப்ரஸ்னைகளை ஏற்றீக்கொண்டே செல்கிறோம்..இறக்கும் இடம் வந்தால் கூட இறக்குவதில்ல...இப்படி சுமை கூடிக்கொண்டே போவதால் அதை சமாளிப்பது கடினமாகிறது...பல ப்ரஸ்னைகள் கூடி போவாதால் சமாளிக்க முடியவில்ல்..அணுகு முறையில் தனிப்பட ப்ரஸ்னைகளை சமாளிப்பது மிக சுலபம்..ஆனால் இறக்கி வைக்காமல் பொதி சுமப்பது போல சுமப்பதால் தான் நாம் கஷ்டப்படுகிறோம்.

சுமைகளை இறக்கி வையுங்கள்..அதை சுமப்பதால் அது சுகமாக உங்களிடம் அமர்ந்து கொள்ளும்..

வாழ்வில் நிறைய சுவாரசியங்கள் உண்டு அவற்றிற்கும் இடம் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை: