Pages

வியாழன், ஏப்ரல் 18, 2013

மலைக்கோவில் தோன்றிய கதை


    மலைக்கோவில் தோன்றிய கதை: முதலில் மனிதன் பயந்த பொருள் மின்னல், தனது ஆளுமையில் உள்ள அனைத்து ஆபத்தையும் கண்டறிந்து சமாளித்த மனிதன் விண்ணில் இருந்து அதிரடியாக தாக்கும் மின்னலை மட்டும் நீண்ட காலமாக பயத்துடனே பார்த்து வந்தான், முதலில் பருத்த இடிச்சத்தம் அதனை தொடர்ந்து வந்த கண்ணைப்பறிக்கும் மின்னல், அந்த மின்னல் அவன் கண் முன்னே பலரின் உயிரையும் பறித்தது, விளைவு விண்ணில் சாமி ஏதோ கேட்கிறது என்றான். முதலில் மின்னலில் தாக்கி இறந்து போனவர்களை மலை உச்சியில் வைத்துவிட்டு வரத்துவங்கினான். மேலும் அவனுக்கு கிடைத்ததெல்லாம் வேட்டையாடும் உயிரினம் தான், தான் வேட்டையாடிய உயிரினத்தின் மிச்ச மீதியை மலையின் உயரங்களுக்கு சென்று வைத்துவிட்டு திரும்பிவிட்டான், இங்கு ஒரு மாற்றம் மழைக்காலம் முடிந்த பிறகு மலை ஏறினான், கிழே வந்து அடுத்த மழைக்காலம் வரை இடி மின்னல் இல்லை, விண்ணக தெய்வம் நமது படையலை ஏற்றுக்கொண்டது கணக்கிட்டான்.
அடுத்த பருவம் வந்தது மீண்டும் இடி மின்னல் இப்போது மேலும் உயரம் மேலும் அதிக படையல் இது தான் ஆதிமனிதன் மலை மீது கடவுளை கண்ட கதை,
அய்ரோப்பியர்கள் மலைக்கோவில் அமைக்க முந்திக்கொண்டனர், காரணம் பரந்து விரிந்த ஆசிய சமவெளிகளில் இமயமலைத்தொடர்களில் மட்டும் தான் பனிபடர்ந்த உயரமான சிகரங்கள் காணமுடிந்தது மத்திய ஆசியா எங்கும் மலைகள் இல்லை, அங்கிருந்து யுரேசியா வழியாக நியோலேதிக் இனகுழு ஒன்று அய்ரோப்பியாவில் நுழைந்தது எங்கும் பனிபடர்ந்த மலைகள்,வேட்டையாட கால்நடைகள் என இயற்கை பெரும் செல்வத்தை அவர்களுக்காக வைத்திருந்தது, தனது மூதாதையார்கள் செய்ததை இங்கு வித்தியாசமாக செய்ய ஆரம்பித்தான், அதாவது அவனது முன்னோர்கள் உயரமான பகுதிகளுக்கு சென்று படையலை வைத்துவிட்டு திரும்புவதை பாரம்பரியமாக கொண்டனர். இங்கு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து வழிபாட்டுத்தலம் கட்ட ஆரம்பித்தான். காரணம் பனி படர்ந்த மலைகள் கோடையில் உருகிவிடுவதால் அவனுக்கு அடையாளம் வைக்க ஒரு இடம் தேர்வு செய்யவேண்டியதாயிற்று உலகத்தின் முதல் மலைக்கோவில் இன்றைய இத்தாலிக்கும் ஜெர்மனுக்கும் இடையில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உருவானது, அது வெறும் பாறைகள் மற்றும் களிமண் சாந்துகள் கொண்ட ஒரு முக்கோண வடிவம் உடையது. அதற்கு கூரைகள் இல்லை, ஒரு மூலையில் பலிபீடம் விரிந்த பகுதியில் வழிபாடுகள் நடத்துவதற்காக முக்கோண வடிவங்களை தேர்தெடுத்து இருப்பார்கள்,
உலகிலேயே அதிகம் ஆதிமனிதன் கட்டிய மலை வழிபாட்டுத்தலங்கள் அய்ரோப்பாவில் கிரீஸ், இத்தாலி, பின்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. அதன் பிறகு பல கி மூ 5000 முதல் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மலைக்கோவில் கட்டதுவங்கினர், ஆசியாவின் மிகபழமையான மலைக்கோவில் இந்துகுஷ் மலைப்பகுதியில் உள்ளது, இமயமலையில் 4000 வருடங்களுக்கு முன்பு திபெத்திய மக்கள் குடியேற துவங்கினர், இவர்கள் சீன சமவெளிகளில் இருந்து நாடோடிகளாக இமயமலையில் ஏறத்துவங்கினர். அவர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டனர். ஆகையால இமயமலை எங்கும் வழிபாட்டுத்தலங்கள் உருவாகின. இந்திய சமவெளிகளில் இருந்து சென்ற மக்களும் தங்களுக்கு என்று வழிபாட்டுத்தலங்களை அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
சமவெளிகளில் உள்ள மனிதர்கள் உயரமான மலைகளுக்கு எங்கு செல்வார்கள் ஆகையால் அவர்கள் செயற்கையாக உயரமான வழிபாட்டுத்தலங்களை கட்ட ஆரம்பித்தார்கள், பழைய வேதகாமத்திலும் குரானிலும் வரும் பிர்அவன் கட்டிய உயரமான கட்டிடம், இறந்தவர்கள் நேராக கடவுளை சென்றடைவார்கள் என்று எண்ணி எகிப்தியர்கள் கட்டிய பிரமிடுகள். (மத்திய ஆசியா மற்றும் எகிப்தின் நைல் நதி சமவெளிகளில் மலைகள் இல்லாத காரணத்தால் அக்கால மக்கள் செயற்கையாக வழிபாட்டுத்தலம் அமைக்கும் முறை இப்படித்தான் வந்தது)

இந்திய தீபகற்பத்தில் முதலில் வாழ்விடங்களுக்கு அருகிலேயே வழிபாட்டு தளங்கள் அமைக்கப்பட்டதால், உலக மக்களிடம் முக்கியத்துவம் பெறத்தவறிவிட்டது.

உலக மக்களிடம் முக்கியத்துவம் பெறத்தவறி விட்டாலும் இந்திய தீபகற்ப மக்களிடையே குன்றுகள், மலைகள், மற்றும் கற்குன்று வழிபாட்டுத்தலங்கள் பிரபலமானது, மலை வழிபாட்டுத்தலங்கள் அனைத்து சமயத்திற்கும் முக்கியமான இடமாக மாறியது,
காலப்போக்கில் மலைகுன்றுகளில் இருந்து இந்திய தீபகற்ப மக்கள் தங்கள் வாழ்விடம் தேடிசமவேளிகளுக்கு வந்து குடிப்பெயரந்து விட மலைக்கோவில் தனித்து விடப்பட்டது.

       காலப்போக்கில் முன்னேற்றத்திற்கான வழியை பார்த்து மேற்குலக நாடுகள் உயரமான வழிபாட்டுத்தலங்களை சுற்றுலாத்தலமாக மாற்றி தேவைப்பட்ட நேரங்களில் குடும்பத்துடன் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வருகின்றனர். ஆகையால் இந்த இடங்கள் உயரமான சுற்றுலா தளமாக   மாறிவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்றும் வழிபாட்டுத்தலமாக கொண்டு குறிப்பிட்ட நாட்களில் அதிக அளவு மக்கள் செல்வதால் உயிரிழப்பு மற்றும் மனித சக்தி விரயம் போன்றவை ஏற்படுகிறது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள உயரமான மலைக்கோவிலில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7069 ஆகும் இதில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சபரிமலை விபத்தும் அடங்கும்

இந்தியாவில் சில பிரபலமான மலை வழிபாட்டுத்தலங்கள் பத்ரிநாத், அமர்நாத், வைஷ்ணவி ஆலயம், மற்றும் சிறுமலை வழிபாட்டுத்தலம் திகம்பரேஷ்வர்(ஜெயின்) திருப்பதி (வைணவம்), சபரி (கலப்பு), குன்றுகளில் பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி போன்றவைகள்.

கருத்துகள் இல்லை: