ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!
By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த பல ஆண்டுகளாக சதா டென்ஷன், அதனால் தூக்கமின்மை, உடல் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, பிடிப்பு போன்றவற்றினால் அவஸ்தைப்படுகிறேன். இருப்பினும், தியானம், கடவுளை வேண்டுதலினால் அவ்வப்போது சமாளித்து வருகிறேன். இவை முழுவதுமாக மாற ஆயுர்வேதத்தில் மருந்துகள், வைத்தியமுறைகள் உள்ளனவா?
எம்.எஸ்.மணி, புதுக்கோட்டை.
மூளைச் சுருக்கம் என்ற ஓர் உபாதையை அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் தொய்வுக்குக் காரணம். மேலும் ஏறிடும் வயோதிகத்தில் வாதம் எனும் உடல் தோஷத்தின் குணங்களாகிய வறண்ட தன்மை, லேசான தன்மை, மிக மிக நுண்ணிய பாதைகளில் ஊடுருவிப் பாயும் தன்மை, சொரசொரப்பு, எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் தன்மை ஆகியவை இயற்கையாகவே கூடுவதால், மூளையிலிருக்கும் தர்ப்பகம் எனும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை போன்றவற்றைக் குறைத்துவிடும். இந்த வாயுவின் சீற்றமானது உடல் வலி, மூட்டுவலி, தூக்கமின்மை, இடுப்புவலி, பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
மூளை நரம்புகளை வலுப்படுத்தவும் அங்கு ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தைக் காப்பாற்றி, கபத்தின் குணங்களைக் கூட்டி, அதன் மூலம் ரசாயனச் சுரப்பிகளின் கேந்திரங்களை வலுப்படுத்தவும், ஆயுர்வேதம் சில சிறந்த உபாயங்களாகிய "நஸ்யம்' எனும் மூக்கினுள் பிழியப்படும் எண்ணெய் முறையையும், தலையில் நிரப்பி வைக்கப்படும் "சிரோவஸ்தி' எனும் எண்ணெய் கட்டும் வைத்திய முறையையும் உபதேசித்திருக்கிறது. இவற்றை நீங்கள் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சைகளாகும். இந்த சிகிச்சை முறைகளை செய்து கொள்ளும் நாட்களிலேயே, "ஸ்ர்வாங்தைலதாரா' எனும் உடலெங்கும் பிழியப்படும் மூலிகை எண்ணெய் வைத்தியமும், இதமான பதத்தில் தசைகளையும், மூட்டுப் பகுதிகளையும் தேய்த்துவிடும் முறையும் மிகவும் சிறந்த வைத்தியமுறைகளாகும். மூலிகை வேர்களையும், இலைகளையும் கொண்டு தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதிலிருந்து வரும் நீராவியை உடலெங்கும் படும்படி காட்டப்படும் சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். மூலிகைத் தைலங்களாலும், மூலிகைக் கஷாயங்களாலும் செய்யப்படும் "வஸ்தி' எனும் ஆஸன வாய் வழியாக மலக்குடலுக்குச் செலுத்தப்படும் சிகிச்சைமுறையும் சிறப்பானதுதான்.
நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாட்டு உணவுமுறையை நீங்கள் தொடர்ந்து அமைத்துக் கொள்வதும் உடல் நலனுக்கு நல்லதே. உணவு உட்கொள்ளத் தொடங்கியது முதல் அது முழு அளவு ஜீரணம் அடையும் வரையிலான கால அளவை மூன்று சமபாகங்களாகப் பிரித்து முதலாவது கபகாலம் என்றும், அடுத்து பித்த காலம் என்றும், கடைசியில் உள்ளது வாத காலம் என்றும் கூறுவர். அதனதன் காலங்களில் அவை அவை தலைவனாக நின்று அதனதன் பணியைச் செவ்வனே செய்கின்றன. அந்த வகையில் முதலில் சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய், பருப்பு கலந்து அன்னமும் நடுவில், பித்தத்தைத் தூண்டிவிடும் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த ரசம் சாதமும், இறுதியில் வாயுவை சீராகச் செயல்படுத்தக் கூடிய துவர்ப்பு, புளிப்பு நிறைந்த மோருடன் கூடிய உப்பு, ஊறுகாய்க் காரமுடன் சாப்பிட, குடல் பகுதியில் இந்த மூன்று தோஷங்களின் சீரான செயல்பாட்டின் மூலமாகவும், நீங்கள் மூளைப் பகுதியை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக