Pages

புதன், அக்டோபர் 31, 2012

சிவப்பு கூண் வண்டு


Rhynchophorus ferrugineus MHNT.jpg

சிவப்பு கூண் வண்டு


திணை:
(இராச்சியம்) விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு பூச்சிகள்
வரிசை: வண்டுகள்
குடும்பம்: நீண்மூஞ்சிவண்டு
பேரினம்: Rhynchophorus
இனம்: R. ferrugineus

 சிவப்பு கூண் வண்டு அல்லது செந்நிற நீள்மூஞ்சி வண்டு (red palm weevil, Rhynchophorus ferrugineus, Asian palm weevil or sago palm weevil. ) என்பது தென்னை மற்றும் பனை மரங்களை தாக்கும் பூச்சியாகும். இப்பூச்சி 2 முதல் 5 செ.மீ நீளம் வளரக்கூடியவை. இவை சிவப்பு நிறத்தில் காணப்படும். மற்ற நிறங்களிலும் இவை காணப்படுகின்றன அவை வேறு பெயரில் அழைக்கப்படுகிறது ). இதன் லார்வா எனப்படும் புழுக்கள் ஒரு மீட்டர் வரை மரத்தண்டுகளில் துளையிடும் இதனால் லார்வா உள்ள மரமானது பலவீனமடைந்து இறுதியில் பட்டுப்போய்விடும். இதனால் இவ்வண்டுகள் தென்னை, பேரிச்சம் மரம், பனை மரம் போன்றவற்றை தாக்கும் ஆற்றல் மிக்க பூச்சியினமாக கருதப்படுகிறது . ஆசியாவின் வெப்பமண்டலத்தை சேர்ந்த இவ்வண்டு ஆப்பிரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பரவியது. பின் 1980களில் நடுநிலக் கடல் (மத்திய தரைக்கடல்) நாடுகளை அடைந்தது. இவ்வகை வண்டுகள் 1994ல் முதலில் எசுப்பானியாவில் இனங்காப்பட்டது . 2006ல் பிரான்சில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை வண்டுகள் அமெரிக்க கண்டத்தில் முதன் முதலில் குராசோ நாட்டில் இருந்தது 2009 சனவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது , அவ்வாண்டே அருபா நாட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கலிபோர்னியா மாநிலத்தின் லாங்குனா பீச்சில் இருப்பது 2010ல் கண்டுபிடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: