Pages

திங்கள், செப்டம்பர் 10, 2012

உங்களுக்குத் தெரியுமா? நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறதாம்!

குழந்தைகள் தமது நகைச்சுவை ஆற்றல், புன்னகைக்கும் பாங்கினை தமது பெற்றோர்களிடமிருந்தே கற்றுக்கொள்கின்றனர் என ஆய்வு ஒன்றின் மூலம் வெளிப்படையாகியுள்ளது.

இதன்படி தமது ஆறாவது மாதத்திலேயே தந்தை, தாயிடமிருந்து கற்றுக்கொள்கின்றதுடன், படிப்படியாக மற்றவர்களை சிரிக்கவைக்கும் ஆற்றல்களையும் பெற்றோர்களிடமிருந்தே கற்றுக்கொள்வதாக நியூ ஹம்சையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் ஸபரோ, ஜான்சன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜினா மரியால்ட் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக 30 வரையான குழந்தைகளை ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்துள்ளனர். மேலும் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தைகள் தாமாகவே நகைச்சுவைகளை உருவாக்கும் ஆற்றல்களைக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: