சென்னை: கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தவிர்க்கவும், கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கவும் யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் கிங் பியூஸ் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும் சிலிண்டர் விபத்துகளில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதற்க்கு தீர்வு காணும் வகையில் கோவையைச் சேர்ந்த யோக பிரியா மார்க்கெட்டிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பொருளே கிங் பியூஸ் கேஸ் பாதுகாப்பு கருவி.
விபத்துகள் எப்போது ஏற்படும் என்பதை யாராலும் கூற முடியாது. பெரும்பாலான கேஸ் விபத்துகள் கசிவின் காரணமாக ஏற்படுகிறது. இக்கருவியானது கேஸ் கசிவு ஏற்பட்டால் தானாகவே செயல்பட்டு கசிவு மற்றும் பெரும் விபத்தையும் தடுத்து முற்றிலும் பாதுகாப்பளிக்கிறது.
கிங் பியூஸ் ரெகுலேட்டரில் அடுப்பு முதல் சிலிண்டர் வரை எங்கேனும் காஸ் கசிந்தால், அதனை தடுப்பதற்கு தானியங்கி அடைப்பான் வசதி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது இல்லத்தரசிகளின் கவலை கேஸ் எப்போது தீரும் என்பது தெரியாதது தான். ஆனால் இந்த ரெகுலேட்டரில் கேஸின் அளவை காண அளவு மானி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கேஸ் தீரும் முன்பே இல்லத்தரசிகள் சிலிண்டரை புக் செய்து கொள்ள முடியும்.
மேலும் கிங் பியூஸ் ரெகுலேட்டர் அழுத்தம் மாறாமல் சற்றே எரிவாயு செல்வதை குறைப்பதால் 7 முதல் 10 நாட்கள் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என்று இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தால் ஏற்படும் கேஸ் விரயத்தையும் இக்கருவி தடுக்கிறது.
இக்கருவி ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப்பட்டது ஆகும். மேலும் இது ஐஎஸ்ஓ, சென்னை ஐஐடி தரச் சான்றிதழ் பெற்றது மற்றும் பெங்களூரில் உள்ள எல்இஆர்சியில் பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பும், அதிக பயன்பாடும் உள்ள இந்த ரெகுலேட்டர் 3 வருட திரும்பப் பெறும் வாரண்ட்டியுடன் கிடைப்பது கூடுதல் சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக