Pages

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

மனிதர்களிடம் பரவும் புதிய உயிர்கொல்லி வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

·         சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபி யாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரசை இங்கிலாந்து சுகாதார மையம் ஆய்வு செய்தது. இதுவரை மனிதனை தாக்காத புதிய வகை வைரஸ் என்று சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த வைரஸ் மேலும் பரவினால் பெரும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதார மையம் கூறுகிறது. இதையடுத்து உலக சுகாதா நிறுவனம் உலகம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரசை அழிக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: