Pages

சனி, ஆகஸ்ட் 11, 2012

Outlook.com ஏன் சிறந்தது? - 10 காரணங்கள்


Outlook.com ஏன் சிறந்தது? - 10 காரணங்கள்


 

பல ஆண்டுகளாக ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் கூட Outlook .com இன் அமைப்பு, எளிமை, வசதிகள் ஆகியவற்றை பார்த்து Outlook க்கு மாறி வருகின்றார்கள். நிறைய பேரை கவர்ந்த அதன் சிறப்பம்சங்களை இந்த பதிவில் காண்போம்.

1. Temporary Password - கொண்டு Sign in செய்யும் வசதி 

Browsing Centre
போன்ற போது இடங்களில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தவே நம்மில் பலர் பயப்படும் நிலையில் இது மிகப் பெரிய வசதி. Sign in செய்யும் போது உங்கள் அலைபேசி எண்ணை கொடுத்து Temporary Password உருவாக்கி, அப்போது மட்டும் sign in செய்து கொள்ளலாம். இதற்கு Outlook தளத்தில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை  Register செய்து இருக்க வேண்டும்.


Gmail -
லில் இது போல உள்ள ஒரு வசதி - two-step verification

2. 7GB Storage வசதி 

ஜிமெயில் சமீபத்தில் 10GB ஆக Storage வசதியை மாற்றியது. Outlook அறிமுகத்திலேயே  7GB தந்து உள்ளது.

3. Delete செய்யப்பட்ட மெயில்களை Recover செய்யும் வசதி.

சில நேரங்களில் Inbox மற்றும் Trash இரண்டில் இருந்தும் நமக்கு தேவையான மின்னஞ்சல் ஒன்று Delete ஆகி இருக்கலாம். அதை எளிதாக மீட்கும் வசதியும் உள்ளது. Deleted என்ற Folder-ஐ ஓபன் செய்து "recover deleted messages." என்பதில் இதை செய்யலாம்.


4. Temporary மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும் வசதி 

நிறைய தளங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் Spam மெயில்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். இதை தவிர்க்க தற்காலிகமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கலாம். இதை வேண்டும் என்ற போது Delete செய்து கொள்ளலாம். [இதைப் பற்றி தனியாக ஒரு பதிவில் காண்போம்]



5. HTML, CSS Coding-களை பயன்படுத்தும் வசதி 

Gmail, Outlook
இரண்டும் இவற்றை தருகின்றன. Outlook ஒரு மெயில் கம்போஸ் செய்யும் போது Options என்பதை கிளிக் செய்து இவற்றை பயன்படுத்தும் வசதியை தெரிவு செய்யலாம்.

6. மின்னஞ்சல்களை பிளாக் செய்யும் வசதி. 

தேவை இல்லாத மின்னஞ்சல்கள் நமக்கு அடிக்கடி வரலாம். சில சமயங்களில் ஒரே முகவரியில் இருந்து வரக்கூடும். குறிப்பிட்ட முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களை மட்டும் கூட நாம் பிளாக் செய்ய முடியும்.

Inbox-
இல் இருந்து குறிப்பிட்ட மெயிலை திறந்து  "Sweep" -> Delete -> Block all future messages என்றும் கொடுத்து விடலாம். நிறைய மெயில் ID-களை இதில் சேர்க்க  Settings >> More Mail Settings >> Safe and blocked senders என்பதில் செல்லவும்.

7. 25MB
க்கு மேல் Attach செய்து அனுப்பும் வசதி. 

outlook -
இல் 25MB க்கு File Attach செய்ய முடியும் என்ற போதிலும் அதற்கு மேல் அனுப்ப முயன்றால் அவை Skydrive கணக்கிற்கு சென்று விடும். மின்னஞ்சலை பெறுபவர் அங்கே சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

8. மெயில்களை வரிசைப் படுத்தும் வசதி 

உங்கள் மின்னஞ்சல்களை கீழே படத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி வரிசைப் படுத்திக் கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட மெயில்களை எளிதாக தேடலாம்.


9. சமூக வலைத்தள நண்பர்களை தொடர்பு கொள்ளும் வசதி 

Outlook-
இல் Twitter, Facebook and LinkedIn போன்றவற்றில் உள்ள நண்பர்களை Integrate செய்ய இயலும்.

10. மிக அதிக வேகம் 

ஜிமெயில் போன்று இல்லாமல் outlook மிக வேகமாக இருக்கிறது. இணைய இணைப்பு எவ்வளவு குறைவாக இருந்தாலும் வேகமாக திறக்கிறது, செயல்படுகிறது.


 

 


கருத்துகள் இல்லை: