இயற்கையாக மழை பொழிவது தொடர்பான பெர்ஜிரானின் தத்துவமே செயற்கை மழை பெய்யச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.
மிகு தட்ப நிலையிலுள்ள நீர்த்துளிகளைக் கொண்டிருக்கும் மேகங்களின் மேல்தளங்களில் விமானங்களிலிருந்து திட நிலையிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு (உலர்ந்த பனிக்கட்டி) தூவப்படுகிறது. அதனால், அங்கு உறைநிலை அடையாத மிகுதட்ப நிலையிலுள்ள நீர்த்திவலைகளின் ஒரு பகுதி பனிக்கட்டி படிமங்களாக மாறுகிறது. இதன் மூலம் மழைத்துளி உருவாகிறது.
இதுபோல் வெப்பமேற்றும் கருவிகள் மூலம் மேகத்திற்குள் வெள்ளி அயோடைட் துகள்களை செலுத்துவதாலும் மேகங்களில் பனிக்கட்டிப் படிமங்கள் ஏற்படுகின்றன. எப்படியென்றால், வெள்ளி அயோடைட் படிமங்களின் அமைப்பும், மழை மேகங்களில் ஏற்படும் பனிக்கட்டி படிமங்களின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. ஆதலால், வெள்ளி அயோடைடின் சின்னஞ் சிறு படிமங்கள் மிகுதட்ப நீர்த்திவலைகளையுடைய மேகக் கூட்டத்தினுள் செல்லும்போது பனிக்கட்டிகளைப் பிறப்பிக்கும் கருக்களாக செயல்படுகிறது.
இப்படி செயற்கை மழையை பொழியவைக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஒருசில இடங்களில் செயற்கையாக மழையைப் பொழியவைத்து சாதனையும் புரிந்துள்ளார்கள். ஆனாலும், இன்றுவரை பெருமழையை செயற்கையாக எந்த விஞ்ஞானிகளாலும் உருவாக்கிக் காட்ட இயலவில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக