Pages

வியாழன், ஜூன் 23, 2011

சித்த மருத்துவம்


தொல் தமிழர்கள் தங்கள் நலன் காக்கவும்நோய் தடுக்கவும்நோய் தீர்க்கவும் கண்டுபிடித்ததும்வளர்த்ததும்கடந்த 50,000 ஆண்டுகளாக வளர்ந்துக் கொண்டிருப்பதுமான நலத்துறை மற்றும் மருத்துவமுறைகள் தாம் தமிழ் மருத்துவம் என அழைக்கப்படுகிறது. தொல் சித்தர்கள் பயன்படுத்தி உலகுக்குக் காட்டிய முறையாதலின் இது சித்த மருத்துவம் எனவும் பெயர்பெற்றது. சித்தர்கள் பொதுவாக மலைகளிலும், குகைகளிலும் தனித்து வாழ்ந்து வந்தனர். எனவே, இம்மருத்துவச் சொல் அகராதிக்கு மலையகராதிஎன்ற பெயரும் உண்டு. அரிய மணிகளால் செய்யப்பட்ட மருந்துமுறை என பொருள்படுமாறு சிந்தாமணி அல்லது தெய்வமணி எனவும் இதனை வழங்குவர்.
            பேரண்டம் என்று அழைக்கப்படும் பிரபஞ்சம் கோடானுகோடி கோள்களின் தொகுதிகளின் மூலக்கூறுகள்நிலம்நீர்தீவளிவெளி என்ற ஐந்து பூதங்கள் கலந்த பொருள்களாம். இவை, நம் உடலிலுள்ள 5 அடிப்படைக் கூறுகளாகும். அண்டத்திலுள்ளது பிண்டத்தில் என்ற முறையில் உடல் அண்டக் கோடுகளோடு இயைந்துள்ள கருவி என்பது சித்த மருத்துவ அடிப்படைக் கோட்பாடு.
            இந்த உடல் உயிரால் உய்க்கப்படுகிறது. உயிர் அழிவற்றது. உடல் அழியும் தன்மைத்து. பொதுவாக நோய் நொடியில்லா இயற்கை வாழ்வு வாழும் மனிதர்கள் 120 ஆண்டுகள் வாழ்வர். தமிழ் மொழியில் மட்டும் 6தலைமுறைகளுக்கான உறவுப் பெயர்கள் உள்ளன. பேரன்மகன்அப்பன்,பாட்டன்பூட்டன்ஓட்டன் போன்றவை அவை.
            உடற்கூறுகள்உறுப்புகள் பற்றி தொல் தமிழரிடையே தெளிவான கருத்துக்கள் விளங்கி வந்துள்ளன. உடல்உயிர்மனம் ஆகியவற்றின் வளர்ச்சிகருவளர்ச்சிதாய்மை போன்ற அனைத்து இயற்கைக் கூறுகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியருக்கு முற்பட்ட காலங்களிலேயே இம்முறைகள் வளர்ச்சியடைந்திருந்தன.
நாளொன்றில் மனிதன் 21600 முறை மூச்சு விடுகிறான் என்பது மிகவும் துல்லியமான அளவீடு. நவீன மருத்துவம் நம் மூச்சு வேகம் நிமிடம் ஒன்றுக்கு12-16 வரை என அளவிட்டுள்ளது. உரோமரின் கணக்கு நிமிடத்திற்கு 15 முறை எனக் கூறுகிறது.
            நோயாளியின் மனநிலைகுடும்பச்சூழல்உடல்நிலைஉணவுப்பழக்கம் என்ற வகையில் ஆராய்ந்து எண் பரிசோதனை செய்து முடிவாக நாடிச் சோதனை செய்து, தக்க மருந்துகள் கொடுப்பார்கள். உணவு பத்தியம்,வாழ்வியல் மாற்றங்கள் தெளிவாக அறிவுறுத்துவார்கள்.
            மருந்துகளும் ஒவ்வொரு நோயாளிக்கும் அன்றன்று செய்யப்பட்டு அன்றே கொடுக்கப்படும். ஒருவருக்குக் கொடுப்பதை மற்றவர்க்கு கொடுப்பது இல்லை.
            மூலிகைச் செடிகள்இலைகள்தண்டுபூக்கள்காய்கனிகள்வேர்,பட்டை எனப் பயன்படுத்திபுடமிட்டு சாறுகள் சேர்த்து கொடுக்கப்பட்டன.
            ஒவ்வொரு மருத்துவரும் ஆசிரியரின் உதவியோடு பயின்று பண்டுவம் செய்வர். மருந்தாக்கியல் முறைகள்மிகக் கட்டுப்பாடானவை,தூய்மைத்தன்மைவீரியம் என்பன தெளிவாக நிர்ணயிக்கப்படும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மருத்துவ முறைகளாக வர்மக்கலைகட்டுகழங்கு,முப்புமணி போன்றவை வேறெங்கிலும் காணக் கிடைக்காதவை.

கருத்துகள் இல்லை: