Pages

புதன், ஆகஸ்ட் 14, 1996

மனித உடல்கள்



நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும். அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...
மனித மூளையின் எடை 1.36 கிலோ
மனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.
மனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
உடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக இருப்பான்.
மனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
மனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது

கருத்துகள் இல்லை: