உலக மகளிர் தினமானது மார்ச் மாதம் 8 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளாளது மகளிரை சிறப்பிக்கும் வண்ணமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போல், ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும் அந்த வீட்டின் மகாராணி தான். ஆகவே வீட்டில் இருக்கும் தாய், மனைவி அல்லது காதலிக்கு, மகளிர் தினத்தன்று ஏதாவது பரிசுகளை வழங்கலாம்.
இத்தகைய  பரிசு சிறியதாக  இருந்தாலும் பரவாயில்லை.  ஆனால் இந்த  நாளை மறக்காமல்  மனதில் கொண்டு,  அவர்களுக்கு வாழ்த்துக்களை  தெரிவித்து பரிசுகளைக்  கொடுத்தால், அவர்கள்  மனதில் மகிழ்ச்சி  கொள்வதோடு, அன்பும்  அதிகரிக்கும். சரி,  இப்போது எந்த  மாதிரியான பரிசுகளை  கொடுக்கலாம் என்று  பார்ப்போமா!!! 
* சாதாரணமாக  ஏதாவது ஒரு  சிறப்பு என்றால்  கொடுக்கும் ஒரு  பரிசு தான்  உடைகள். எனவே  இந்த தினத்திலும்  சேலை, சுடிதார்  போன்ற ஆடைகளை  வாங்கிக் கொடுத்து,  வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். 
* மகளிர்  தினம் என்பதால்,  நிறைய வண்ணமயமான  நிறத்திலும், டிசைனிலும்  வாழ்த்து அட்டைகள்  மார்க்கெட்டில் வெளிவந்திருக்கும்.  ஆகவே நல்ல  வரிகளுடன் கூடிய  வாழ்த்து அட்டைகளை  வாங்கி கொடுக்கலாம்.  இல்லையெனில், அவர்களை  பற்றி உங்கள்  மனதில் இருப்பதை  எழுதிக் கொடுக்கலாம். 
* பொதுவாக  பெண்களுக்கு பூக்கள்  என்றால் மிகவும்  பிடிக்கும். எனவே  இந்த மகளிர்  தினத்தன்று, அவர்களுக்கு  பூங்கொத்துக்களையோ   அல்லது பூச்செடிகளை  வாங்கிக் கொடுக்கலாம். 
* இல்லையெனில்  அவர்களது போட்டோவை  சற்று வித்தியாசமாக,  ஃப்ரேம் செய்தோ  அல்லது கப்-பில்  போட்டோ இருப்பது  போன்று செய்தோ  கொடுக்கலாம். 
* முக்கியமாக  சாக்லெட்டை மறந்துவிட  வேண்டாம். பெண்களுக்கு  சாக்லெட் என்றாலும்  மிகவும் பிடிக்கும்.  எனவே அவர்களுக்கு  பிடித்த சாக்லெட்டை  வாங்கிக் கொடுத்து,  வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.  இவையே மகளிர்  தினத்தன்று, பெண்களுக்கு  கொடுக்க வேண்டிய  சிறிய பரிசுகள்.  வேறு என்னவெல்லாம்  பரிசுகள் கொடுக்கலாம்  என்று உங்களுக்கு  தோன்றுகிறதோ, அதை  எங்களுடன் பகிர்ந்து  கொள்ளுங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக