மறைத்து வைக்கப்பட்ட பழைய பைபிள் பிரதி வெளிவருகிறது!
- துருக்கி: துருக்கி அரசால் கடந்த 13 ஆண்டுகள் காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 ஆண்டுகால பழமையான பைபிள் பிரதி பொது மக்களின் பார்வைக்கு வர இருக்கிறது.
2000 ஆம் ஆண்டு சுங்கச் சோதனையின் போது 1,500 ஆண்டுகள் பழமையான பைபிள் பிரதியொன்றைத் துருக்கி காவல்துறையினர் கைப்பற்றினர். தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட அப்பிரதி, ஏசுவின் தாய் மொழியான அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
சுமார் 14 மில்லியன் யூரோ மதிப்பிடப்பட்டுள்ள இந்தப் பழமையான பைபிள் பிரதியில், தமக்குப் பின்னர் முஹம்மது என்ற தூதர் உலகிற்கு வருவார் என ஏசு போதித்ததான விபரம் தெளிவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
"பர்னபாஸ் சுவிசேஷம்" என கருதப்படும் இப்பழமையான பிரதியினைப் பார்வையிட XVI ஆவது போப் பெனடிக்ட் ஆர்வம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இப்பிரதியினை அங்காரா அருங்காட்சியகத்துக்குத் துருக்கி அரசு கைமாறியுள்ளது.
மிக விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு இப்பழைய பைபிள் பிரதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் போது, முஹம்மது நபியின் வருகை குறித்து அதில் ஏசு தெரிவித்திருந்ததாக கூறப்படும் செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகில் மத நம்பிக்கையாளர்களிடையே அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக