Pages

புதன், ஜூலை 03, 2013

Engineering Books Download


இன்ஜினியரிங் ( Engineering Books Download ) மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.

இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தரவிறக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Engineering books download
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bookboon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம் என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: